ETV Bharat / state

விஜய்காந்த் மறைவிற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இரங்கல்..!

SP Velumani: தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவால் இன்று (டிச.28) காலமானார். அவரது இறப்பிற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இரங்கல் தெரிவித்துள்ளார்.

SP Velumani
விஜய்காந்த் மறைவிற்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி இரங்கல்..!
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 28, 2023, 10:37 PM IST

விஜய்காந்த் மறைவிற்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி இரங்கல்..!

கோயம்புத்தூர்: தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் இன்று(டிச.28) காலை உயிரிழந்தார். அவரது இறப்பிற்குப் பிரதமர், தமிழக முதலமைச்சர், திரைத்துறையினர் உட்பட அரசியல் கட்சியினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சென்னையில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள விஜயகாந்த் உடலுக்குப் பொதுமக்களும் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி இரங்கல் தெரிவித்துள்ளார்.

  • தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும், அன்பு சகோதரருமான திரு.விஜயகாந்த அவர்கள் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன். அவரை இழந்து வாடும் அன்னாரது மனைவியும் தேமுதிக பொதுச்செயலாளருமான…

    — SP Velumani (@SPVelumanicbe) December 28, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இது குறித்து அவர் கூறுகையில், விஜயகாந்த் மறைந்த செய்தி தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் துக்கமான செய்தி. விஜயகாந்த் ஒரு சாமானியராக இருந்து மிகப்பெரிய அளவில் பல படங்களில் நடித்து நடிகர் சங்கத்திற்கும் தலைவராக இருந்து பல்வேறு நற்பணிகளைச் செய்துள்ளார். அதுமட்டுமின்றி தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் என்ற கழகத்தை ஆரம்பித்துச் சிறப்பான முறையில் பணியாற்றி அம்மா (ஜெயலலிதா) உடன் கூட்டணியில் இணைந்து எதிர்க்கட்சித் தலைவராக பணியாற்றியவர்.

இந்நிலையில் அவர் மறைந்து விட்டார் என்ற செய்தி மிகவும் வருந்தத்தக்கது. அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவரது கட்சியினருக்கும், திரைத் துறையினருக்கும் இரங்கல் தெரிவித்து இறைவன் அவர்களுக்குத் தைரியத்தைத் தர வேண்டும்.

சித்தாபுதூர் பகுதியில் உள்ள பாஜக அலுவலகத்தில் கோவை மாவட்ட பாஜக சார்பில், விஜயகாந்த் படத்திற்குக் கோவை மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமையில் மலர் தூவி மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் பாஜக தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: மதுரை தனியார் மால் தீ விபத்து; வணிக வளாகத்தின் உறுதித்தன்மை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.