கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு முரசொலி மன்றத்தின் சார்பாக தென்னிந்திய அளவிலான கேரம் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் தலைமையில் மார்ச் 13ஆம் தேதி தொடங்கி 16ஆம் தேதி வரை தொடர்ந்து நான்கு நாள்கள் நடைபெற்றன.
அதில், தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, கர்நாடக உள்ளிட்டப் பகுதிகளிலிருந்து 125 அணிகள் பங்கேற்றன. வெற்றிபெற்றவர்களுக்கு முதல் பரிசாக 20 ஆயிரமும், இரண்டாம் பரிசாக 12 ஆயிரமும், மூன்றாம் பரிசாக 7 ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டன.
இதையும் படிங்க: பெரம்பலூரில் மாவட்ட அளவிலான கேரம் போட்டிகள்: பள்ளி மாணவர்கள் ஆர்வம்