கோவை மாவட்டம் சூலூர் அருகேயுள்ள குமாரபாளையம் பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் கவிதா தம்பதிக்கு வெற்றிவேல் என்ற மகனும் சாமினி என்ற ஐந்து வயது பெண் குழந்தையும் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை மாலை, வீட்டின் அருகே குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்த சாமினி திடீரென மாயமானார். இது குறித்து புகாரின்பேரில் சூலூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து குழந்தையைத் தேடிவருகின்றனர்.
காணாமல்போன குழந்தை குறித்த எவ்வித தகவல்களும் காவல் துறையினருக்குத் கிடைக்காத நிலையில், சூலூர் காவல் துறையினர் சிறுமியின் அடையாளங்கள் அடங்கிய துண்டுப்பிரசுரங்களை விநியோகித்துவருகின்றனர்.
மேலும், சிறுமி குறித்த தகவல் அளிப்போருக்கு உரிய சன்மானம் அளிக்கப்படும் எனவும் அவர்கள் அளித்த தகவல்களின் ரகசியங்கள் காக்கப்படும் எனவும் காவல் துறையினர் கூறியுள்ளனர்.
மேலும், சிறுமி குறித்த தகவல் அளிப்போர் காவல் துணை கண்காணிப்பாளர், காவல் ஆய்வாளர்கள், காவல் உதவி ஆய்வாளர்கள், சூலூர் காவல் நிலைய தொலைபேசி எண்களை தொடர்புகொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கோவை குண்டுவெடிப்பு: குற்றவாளி குறித்து தகவல் அளித்தால் தக்க சன்மானம்!