பொள்ளாச்சி: பொங்களியூரை சேர்ந்தவர் சிவகுமார் (34). இவர் ஆழியார், பொங்காளியூர் உள்ளிட்ட பகுதிகளில் பானிபூரி கடை நடத்தி வந்தார்.
இவரது தாயார் காளியம்மாள் கடந்த நாற்பது நாள்களுக்கு முன்பு உடல்நிலை சரி இல்லாமல் உயிரிழந்தார்.இதனால் துக்கம் தாங்காமல் சிவகுமார் இரவு நேரங்களில் தாயின் சேலையை வைத்துக்கொண்டு தூங்கி வந்துள்ளார்.
இந்நிலையில் சிவகுமார் நேற்று (டிசம்பர் 28) அதிகாலை வீட்டில் அனைவரும் தூங்கிக்கொண்டு இருந்தபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
அவரது மனைவி சரஸ்வதி காலை எழுந்து பார்த்தபோது, கணவன் தூக்கிட்ட நிலையில் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற கோட்டூர் காவலர்கள் சிவகுமார் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கோட்டூர் காவலர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: சென்னையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர் கைது