ETV Bharat / state

கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற நூதன ஆர்ப்பாட்டம் - பழங்குடியினரின் நலனுக்கான உத்தரவு

கோவை: மாவட்ட ஆட்சியரைக் கண்டித்து சமூக நீதிக் கட்சியினர் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Social Justice Party protest againt covai collector

author img

By

Published : Nov 11, 2020, 4:56 PM IST

பழங்குடியினரின் மீது நடத்தப்படும் தீண்டாமைக்கு எதிரான தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றம் மாவட்டத்தில் விழிக்கண் கண்காணிப்புக் குழு கூட்டத்தை நடத்த வேண்டும் என உத்தரவிட்டது.

இந்த உத்தரவை கோவை மாவட்ட ஆட்சியர் பின்பற்றவில்லை என்பதை வெளிப்படுத்தும் வகையில், ஆட்சியர் அலுவலகம் முன்பு சமூக நீதிக் கட்சியினர் உயர் நீதிமன்ற உத்தரவினை படித்து காட்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதில் பேசிய சமூக நீதிக் கட்சியினர், “உயர் நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக மாவட்ட விழிக்கண் கண்காணிப்புக் குழு கூட்டத்தை நடத்த மறுக்கும் கோவை மாவட்ட ஆட்சியருக்கு நீதிமன்ற உத்தரவு எண் W.P.I0355/2020 படித்து காண்பிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.

மலைவாழ் மக்கள் பழங்குடியினர் மக்களின் நலனுக்காக மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடத்தப்படும் மாவட்ட விழிக்கண் கண்காணிப்புக் குழு கூட்டத்தை உடனடியாக நடத்த வேண்டும். பழங்குடியினருக்காக பிறப்பிக்கப்பட்ட நீதிமன்ற உத்தரவினை பின்பற்ற வேண்டும்” என வலியுறுத்தினார்.

இதையும் படிங்க: மீண்டும் திறக்கப்பட்ட வண்டலூர் உயிரியல் பூங்கா!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.