ETV Bharat / state

'என்னை கோவை ஆட்சியராக்குங்கள்' - சமூக செயற்பாட்டாளர் அதிரடி! - மாவட்ட ஆட்சியராக நியமிக்கக்கோரி மனு

கோவை: ஒரு வருடம் தன்னை மாவட்ட ஆட்சியராக நியமிக்கக்கோரி சமூக செயற்பாட்டாளர் ஒருவர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ள சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

social-activist-petition-urging-to-appoint-himself-as-district-collector-in-coimbatore
author img

By

Published : Sep 23, 2019, 4:54 PM IST

கோவை வெள்ளலூர் பஜனை கோவில் வீதியை சேர்ந்தவர் சமூக செயற்பாட்டாளர் சக்திவேல். இவர் கோவை மாவட்ட ஆட்சியருக்கு இன்ப அதிர்ச்சி ஒன்றை கொடுத்திருக்கிறார். அதாவது, தன்னை ஒரு வருடத்திற்கு மாவட்ட ஆட்சியராக நியமித்தால் ஊதியமின்றி ஆட்சிப் பணி மேற்கொண்டு லஞ்சம் மற்றும் ஊழலை ஒழிப்பேன் எனக் கூறி ஆட்சியர் ராஜாமணியிடம் மனு ஒன்றை அளித்திருக்கிறார்.

இது குறித்து பேசிய சக்திவேல், கோவை மாவட்டத்தில் அனைத்து அரசு அலுவலங்களில் அரசு நிர்ணயம் செய்த தொகையை விட அதிகம் வசூலிப்பதாகவும் லஞ்சம் பெறுவதாகவும் குற்றஞ்சாட்டினார். கேபிள் டிவி கட்டணம், மதுபானக் கடை, முதியோர் உதவித் தொகை பெறுவது என பல்வேறு வகையில் லஞ்சம் பெறப்படுவதாகவும், வெள்ளலூர் பேரூராட்சியில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து தகவல் அறிக்கை கேட்டால் ஏளனமாகப் பார்ப்பதாகவும் அவர் புகார் தெரிவிக்கிறார்.

இதற்கு முடிவுகட்டும் வகையில், மாவட்ட ஆட்சியர் தன் அதிகாரத்தின் கீழ் தன்னை ஒரு வருடம் ஆட்சியராக நியமித்தால் ஊதியம் பெறாமல் பணி செய்து லஞ்சம் மற்றும் ஊழலை ஒழிப்பேன் என்றார்.

ஆட்சியர் தன்னை ஒரு வருட காலம் ஆட்சியராக பணியாற்ற உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என தற்போது அவரை சந்தித்து மனு அளித்திருப்பதாகவும் வியப்பூட்டும் வகையில் பேசியுள்ளார்.

இதையும் படிங்க...

‘ராஜேந்திர பாலாஜி ஒரு மங்குனி அமைச்சர்’ - விருதுநகர் எம்.பி காட்டம்!

Intro:என்னை கோவை மாவட்ட கலெக்டர் ஆக்க வேண்டுமென கலெக்டரிடமே மனு அளிக்க வந்த நபர்.Body:ஒரு வருடம் தன்னை மாவட்ட ஆட்சியராக நியமிக்க கோரி சமூக ஆர்வலர் மனு.

கோவை வெள்ளலூர் பஜனை கோவில் வீதியை சேர்ந்த சமூக ஆர்வலர் சக்திவேல் மாவட்ட ஆட்சியர் கு.ராஜாமணியிடம் தன்னை ஒரு வருடத்திற்கு மாவட்ட ஆட்சியராக நியமித்தால் சம்பளமின்றி ஆட்சி பணி மேற்கொண்டு லஞ்சம் மற்றும் ஊழலை ஒழிப்பேன் என கூறி மனு அளித்தார்.இது குறித்து அவர் கூறுகையில் கோவை மாவட்டத்தில் அனைத்து அரசாங்க அலுவலங்களில் அரசு நிர்ணயம் செய்த தொகையை விட அதிகம் வசூலிப்பதாகவும் லஞ்சம் பெறுவதாக கூறினார்.கேபிள் டிவி கட்டணம்,மதுபான கடை,முதியோர் உதவி தொகை பெற என பல்வேறு வகையில் லஞ்சம் பெறபடுவதாகவும் வெள்ளலூர் பேரூராட்சியில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து தகவல் அறிக்கை கேட்டால் ஏளனமாக பார்ப்பதாகவும் அங்கு வரும் பொதுமக்களை மோசந் நடத்துவதாக தெரிவித்தார்.
எனவே மாவட்ட ஆட்சித்தலைவர் தன் அதிகாரத்தின் கீழ் தன்னை ஒரு வருடம் ஆட்சி தலைவராக நியமித்தால் சம்பளம் பெறாமல் பணி செய்து லஞ்சம் மற்றும் ஊழலை ஒழிப்பேன் எனவும் எனவே ஆட்சியர் தன்னை ஒரு வருட காலம் ஆட்சித்தலைவராக பணியாற்ற உத்தரவு பிறபிக்க வேண்டும் என மனு அளித்தார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.