ETV Bharat / state

மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்ட உக்கடம் ஸ்மார்ட் சிட்டி குளக்கரை! - covai latest news

கோயம்புத்தூர்: உக்கடம் ஸ்மார்ட் சிட்டி குளக்கரையை மக்கள் பயன்பாட்டிற்காக கோவை மாநகராட்சி ஆணையர் திறந்து வைத்தார்.

smart city pond open in covai
smart city pond open in covai
author img

By

Published : Feb 26, 2021, 6:32 PM IST

கோவையில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் கடந்த ஒரு வருட காலமாக நடைபெற்று வரும் நிலையில், கோவையில் சுமார் ஐந்து குளக்கரைகள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சீரமைக்கப்பட்டு வருகின்றது. அதில் 67.17 லட்சம் ரூபாய் மதிப்பில் சீரமைக்கப்பட்ட உக்கடம் குளக்கரையை கோவை மாநகராட்சி ஆணையர் குமாரவேல்பாண்டியன் மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

பின்னர் பேசிய அவர், கோவையில் பெரியகுளம், வாளாங்குளம், கிருஷ்ணம்பதி, செல்வசிந்தாமணி ஆகிய குளங்கள் இன்று முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வரும். இங்கு நடைபயிற்சி மேற்கொள்ளுதல், குழந்தைகள் விளையாடும் வசதிகள் போன்றவை உள்ளன. இதனை சுத்தமாக வைத்துக் கொள்ள அனைவரும் உதவ வேண்டும். நீர் வழிப்பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதனால் திடக் கழிவுகள், கழிவுநீர் இக்குளத்தில் வந்து சேர்வதை தவிர்க்க முடியும்.

குளக்கரைகளுக்கு தற்போது வரை எவ்வித கட்டணமும் முடிவு செய்யப்படவில்லை. இங்கு சிகரெட் பிடித்தல் போன்ற செயல்களை மக்கள் தவிர்த்து விடவேண்டும். இல்லையென்றால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல் தேதி அறிவித்த பின்பு எவ்வித நிகழ்ச்சியும் மேற்கொள்ளப்படக் கூடாது என்பதனால் பணிகள் முடிந்த நிலையில் இருக்கக்கூடிய குளக்கரைகள் இன்று (பிப்.26) முதல் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்படும் எனத் தெரிவித்தார். ஆனால் இங்கு பணிகள் இன்னும் முழுமையாக முடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:

எதிர்க்கட்சிகள் இல்லா சட்டப்பேரவை உருவாகும் -அமைச்சர் ஓஎஸ் மணியன்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.