கோவை மாநகராட்சி வெளியிட்ட தகவலின்படி, மாவட்டத்தில் இன்று புதிய உச்சமாக ஒரேநாளில் 238 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து இவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கோவையில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை இரண்டாயிரத்து 777 ஆக உயர்ந்துள்ளது.
தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த 198 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 479 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கோவையில் இன்று ஒரே நாளில் 6 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளது.
உயிரிழந்தவர்களில் இருவர் உயர் ரத்த அழுத்தத்தினால் சிகிச்சை பெற்று வந்ததாகவும், மற்ற 4 பேரும் நீரிழிவு நோய்க்கு சிகிச்சை பெற்று வந்ததாகவும் தெரிகிறது. அவர்களுக்கு கரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டதில் வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.