ETV Bharat / state

'பாஜக நிர்வாகிக்கு ஒரே ஒரு ஓட்டு' - நெட்டிசன்கள் கிண்டல்!

உள்ளாட்சித் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்ட பாஜக நிர்வாகி, ஒரே ஒரு வாக்கு பெற்றதைத் தொடர்ந்து, #ஒத்த_ஓட்டு_பாஜக எனும் ஹேஷ்டேக் ட்விட்டரில் இந்திய அளவில் ட்ரெண்டானது.

ட்விட்டரில் டிரெண்டாகும் ஹேஷ்டாக்
ட்விட்டரில் டிரெண்டாகும் ஹேஷ்டாக்
author img

By

Published : Oct 12, 2021, 5:37 PM IST

Updated : Oct 12, 2021, 8:02 PM IST

கோயம்புத்தூர்: தமிழ்நாட்டில் அக்டோபர் 6 மற்றும் 9ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று முடிந்தது.

இதில் கோவையில் நடைபெற்று முடிந்த தேர்தலில் திமுக அதிக இடங்களை கைப்பற்றியுள்ளது.

கோவையின் துடியலூர் அடுத்த குருடம்பாளையம் ஊராட்சியில் உள்ள ஒன்பதாவது வார்டுக்கு அக்டோபர் 9ஆம் தேதி, இரண்டாம் கட்டமாக உள்ளாட்சித்தேர்தல் நடைபெற்று முடிந்தது. மொத்தம் ஆயிரத்து 551 வாக்குகள் உள்ள இந்த வார்டில், 913 வாக்குகள் பதிவாகின.

பாஜக நிர்வாகிக்கு ஒரே ஒரு ஓட்டு

இதில் திமுக நிர்வாகி அருள்ராஜ், அதிமுக நிர்வாகி வைத்தியலிங்கம், பாஜக நிர்வாகி கார்த்திக், தேமுதிக நிர்வாகி ரவிக்குமார் ஆகிய நிர்வாகிகள் சுயேச்சைகளாகப் போட்டியிட்டனர்.

இந்நிலையில் அந்த வார்டுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (அக்.12) நடைபெற்றது.

அப்போது திமுக நிர்வாகி அருள்ராஜ் 387 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவருக்கு அடுத்ததாக சுயேச்சை வேட்பாளர் ஜெயராஜ் 240 வாக்குகளையும், அதிமுக நிர்வாகி வைத்தியலிங்கம் 196 வாக்குகளையும் பெற்றனர்.

மூன்று வாக்குகள் செல்லாதவை எனவும் அறிவிக்கப்பட்டன. ஆனால், பாஜக நிர்வாகி கார்த்திக் ஒரே ஒரு வாக்கையும், தேமுதிக நிர்வாகி ரவிக்குமார் இரண்டு வாக்குகளையும் பெற்றனர்.

இந்திய அளவில் ட்ரெண்டான ஹேஷ்டேக்

ஒரே ஒரு வாக்கினைப் பெற்ற கார்த்திக், பாஜகவின் இளைஞரணி மாவட்ட துணைத் தலைவராகப் பதவி வகித்து வருகிறார்.

கார்த்திக்கின் குடும்பத்தில் மொத்தம் 6 பேர் உள்ள நிலையில், அவர்கள் அனைவருக்கும் அருகில் உள்ள வார்டில் வாக்கு இருந்திருக்கிறது. இதனால், அவர் ஒரு வாக்கு மட்டுமே பெற்றிருக்கிறார். இது சமூக வலைதளங்களில் பேசு பொருளாகியுள்ளது.

தற்போது இது தொடர்பான மீம்ஸ்களையும் நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு பாஜகவினரைக் கிண்டல் செய்து வருகின்றனர்.

ட்விட்டரில் டிரெண்டாகும் ஹேஷ்டாக்
ட்விட்டரில் டிரெண்டாகும் ஹேஷ்டாக்

மேலும் #ஒத்த_ஓட்டு_பாஜக எனும் ஹேஷ்டேக் ட்விட்டரில் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகிறது.

பாஜக நிர்வாகியை கிண்டல் செய்யும் மீம்ஸ்களுக்கு பலரும் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: வாக்கு எண்ணிக்கை 1 மணி முன்னிலை நிலவரம்... ஒரே ஒரு வாக்கு பெற்ற பாஜக வேட்பாளர்...

Last Updated : Oct 12, 2021, 8:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.