உலகம் முழுவதும் சைகை தினம் இன்று அனுசரிக்கபட்டுவருகிறது. இந்த தினமானது காது கேளாதோர், வாய் பேச முடியாதோரும் நம்மில் சரி சமமானவர்கள் என்று எடுத்துக்கூறும் வகையில் நடத்தப்பட்டுவருகிறது.
இதன் ஒரு நிகழ்வாக இன்று கோவை ரேஸ் கோர்ஸில் உள்ள பிஷப் அப்பாசாமி கல்லூரியில் மாணவ மாணவிகளுக்கு சைகை மொழி கற்றுத் தரப்பட்டது. இது ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சியாக நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் ஜெமிமா வின்ஸ்டன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், சங்கரா கல்லூரியில் வாய் பேச முடியாதோர் காது கேளாதோருக்கு பாடம் கற்பிக்கும் ஆசிரியர் லெமின் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். (இவருக்கும் காது கேளாது வாய் பேச முடியாது).
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய லெமின், காது கேளாதோர், வாய் பேச முடியாதோர் நம்மில் சரிசமமானவர்களே, சாதாரண மக்களுக்கு ஈடாக உழைப்பவர்களே, அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இந்த விழிப்புணர்வு நடத்தப்படுகிறது. சைகை மொழியை அனைவரும் கற்றுக் கொள்வது நன்மையே என்று சைகையில் கூறினார்.