ETV Bharat / state

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் சித்த மருத்துவ முகாம்! - அகத்தியர் பிறந்த நாள்

கோவை: அகத்தியர் பிறந்த நாளையொட்டி மூன்றாம் ஆண்டு தேசிய சித்த மருத்துவ ஆயுஷ் முகாம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

siddha-medicine-camp-held-in-kovai-collector-office-of-upcoming-agathiyar-birthday
கோவை ஆட்சியர் அலுவலகத்தில் சித்த மருத்துவ முகாம்!
author img

By

Published : Jan 11, 2020, 10:00 AM IST

அகத்தியர் பிறந்த நாளையொட்டி ஜனவரி 13ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் சித்த மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது. இதையொட்டி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவை ஆட்சியர் அலுவலகத்தில் சித்த மருத்துவ ஆயுஷ் முகாம் நடைபெற்றது.

இதில் சித்த மருத்துவ மூலிகைகள், சித்த மருத்துவ மருந்துகள், மருத்துவ குணமுடைய செடிகள், மருத்துவ புத்தகங்கள், மருத்துவ பயிர் வகைகள் போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. மேலும் இங்கு சித்த மருந்துகள் மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டன.

இதுகுறித்து பேசிய அரசு சித்தா உதவி மருத்துவர் ஸ்ரீதேவி, அகத்தியர் பிறந்த நாளையொட்டி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த சித்த மருத்துவம் குறித்த மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது. மக்களுக்கு ஏதேனும் உடல் உபாதைகள் இருந்தால் அதை அப்போதே என்னவென்று கவனித்து அதற்கான சித்த மருந்துகள் வழங்கப்படுகிறது, என்றார்.

அதைத் தொடர்ந்து பேசிய உடுமலைப்பேட்டை சித்த மருத்துவ அலுவலர் லட்சுமி விஜயராஜ், சித்த மருத்துவ முகாமில் மூட்டுவலி, தலைவலி போன்ற பல உடல் உபாதைகளுக்கான சித்த மருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றது என்றார்.

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் சித்த மருத்துவ முகாம்!

இதையும் படியுங்க:

மத்திய சுகாதாரத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி!

Intro:சமத்துவம் குறித்த விழிப்புணர்வு முகாம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது

Body:மூன்றாம் ஆண்டு தேசிய சித்த மருத்துவ ஆயுஷ் முகாம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.

வருகின்ற 13ஆம் தேதி அகத்தியர் பிறந்த தினமாக தமிழகம் முழுவதும் கொண்டாடப்படும் நிலையில் அகத்தியர் வழி மருத்துவமான சித்த மருத்துவத்தைப் மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் இலவச சித்த மருத்துவ முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் சித்த மருத்துவ மூலிகைகள் சித்த மருத்துவ மருந்துகள் மருத்துவ குணமுடைய செடிகள், மருத்துவ புத்தகங்கள் மருத்துவ பயிர் வகைகள் போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன மேலும் இங்கு சித்த மருத்துவர் மருந்துகளும் மக்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.

இதுகுறித்து பேசிய அரசு சித்த மருத்துவ உதவி மருத்துவர் ஸ்ரீதேவி அகத்திய முனிவரின் பிறந்த தினத்தை முன்னிட்டு இந்த சித்த மருத்துவ முகாம் நடைபெறுகிறது என்றும் தமிழ்நாடு முழுவதும் மார்கழி மூன்றாம் நாளை அகத்தியர் பிறந்த தினமாக கொண்டாடுகின்றோம் அதற்கு முன்கூட்டியே மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சித்த மருத்துவம் குறித்த விழிப்புணர்வு மருத்துவ முகாம் போன்றவை நடத்தப்படுகிறது என்று தெரிவித்தார். மேலும் இங்கு ஒரு மக்களுக்கு ஏதேனும் உடல் உபாதைகள் இருந்தால் அதை அப்பொழுதே என்னவென்று கவனித்து அதற்கான சித்த மருத்துவ மருந்துகள் வழங்கப்படுவதாக தெரிவித்தார்.

அதன்பின் பேசிய உடுமலைப்பேட்டை சித்த மருத்துவ அலுவலர் லட்சுமி விஜயராஜ் சித்த மருத்துவம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துகின்ற வகையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சித்த மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது என்று தெரிவித்தார் எங்கே மூட்டுவலி தலைவலி போன்ற பல உடல் உபாதைகளுக்கு காண சித்தமருத்துவ மருந்துகள் வழங்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.