ETV Bharat / state

இறைச்சிக்காக மாடுகளை கேரளா ஏற்றிச்சென்ற லாரி - சிறைப்பிடித்த சிவசேனா கட்சியினர்! - மாட்டுச்சந்தை

இறைச்சிக்காக கொண்டுச்செல்லப்பட்ட 40 மாடுகளை ஏற்றி வந்த லாரியை சிவசேனா கட்சியினர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மாடுகளை ஏற்றி சென்ற லாரியை சிறைபிடித்த சிவசேனா கட்சியினர்!

author img

By

Published : May 22, 2022, 5:45 PM IST

பொள்ளாச்சி (கோவை): கோவை பொள்ளாச்சியில் இன்று மாட்டுச்சந்தை நடைபெற்றது. வியாபாரிகள் குறைந்த விலையில் மாடுகளை வாங்கி, அண்டை மாநிலமான கேரளாவுக்கு இறைச்சிக்காக மாடுகளை லாரி மற்றும் டாரஸ் லாரிகள் மூலம் கொண்டு செல்கின்றனர். இதைத் தடுக்கும் விதமாக, சிவசேனா கட்சியினர் ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில் மிளகாய் அரைத்துவழிபாடு செய்தனர்.

இதையடுத்து திருப்பூர் சாலை நெகமம் பகுதியில் வேலூரில் இருந்து கேரள மாநிலம் சாலக்குடி பகுதிக்கு டாரஸ் லாரி மூலம் இறைச்சிக்காக கொண்டுச்செல்லப்பட்ட 40 மாடுகளை ஏற்றி வந்த லாரியை சிவசேனா கட்சியினர் தடுத்து நிறுத்தினர்.

சிவசேனா கட்சியின் இளைஞரணி மாநிலத் தலைவர் அட்சயா திருமுருக தினேஷ் கொடுத்தப் புகாரின் பேரில், நெகமம் போலீசார் மாடு ஏற்றி வந்த லாரியைப் பறிமுதல் செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

மாடுகளை ஏற்றி சென்ற லாரியை சிறைப்பிடித்த சிவசேனா கட்சியினர்!

இதையும் படிங்க : இடுகாட்டில் புதைக்க இடம் மறுப்பு.. சாலையோரம் எரிக்கப்பட்ட தலித் பெண்ணின் சடலம்..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.