ETV Bharat / state

Driver Sharmila: புதிய காரை டெலிவரி எடுத்த ஷர்மிளா - ஐடி நிறுவனத்தில் கார் ஓட்ட போவதாக தகவல்!

முன்னாள் தனியார் பேருந்து பெண் ஓட்டுநர் ஷர்மிளாவிற்கு கமல்ஹாசன் கார் பரிசளித்த நிலையில் இன்று காரை டெலிவரி எடுத்துள்ளார். ஜடி நிறுவனத்திற்கு கார் ஓட்டவுள்ளதாக ஷர்மிளாவின் தந்தை மகேஷ் கூறியுள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jul 10, 2023, 3:41 PM IST

கோயம்புத்தூர்: மாவட்டம் வடவள்ளி பகுதியைச் சேர்ந்தவர் ஷர்மிளா (23). கோவையின் முதல் தனியார் பேருந்து பெண் ஓட்டுநரான இவரைப் பற்றிய செய்திகள் சமூக ஊடங்களில் வைரலாக பரவி வந்தது. இந்த நிலையில், அனைத்து தரப்பினரும் ஷர்மிளாவிற்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வந்தனர். அதன்படி பாஜக தேசிய மகளிர் அணித் தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன், ஷர்மிளாவின் பேருந்தில் பயணம் செய்து அவருடன் கலந்துரையாடினார்.

இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியும் அந்தப் பேருந்தில் பயணம் செய்து ஷர்மிளாவுக்கு வாழ்த்துகள் தெரிவித்தார். கனிமொழி பயணம் செய்த ஒரு மணி நேரத்தில் தன்னைப்பேருந்து உரிமையாளர் துரைக்கண்ணன் என்பவர் வேலையை விட்டு நீக்கியதாகத் தெரிவித்த ஷர்மிளா, பேருந்து ஓட்டுநர் பணியை விட்டு கால் டாக்ஸி ஓட்டப்போவதாக தெரிவித்தார்.

இந்த நிலையில் கடந்த வாரம் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், சென்னையில் ஷர்மிளாவை சந்தித்து உரையாடினார். அப்போது, வாடகை கார் வாங்குவதற்காக மக்கள் நீதி மய்யம் பண உதவி செய்யும் எனத் தெரிவித்து அதற்கான முதல் கட்ட காசோலையை ஷர்மிளாவிடம் கமல்ஹாசன் வழங்கினார். மேலும், புதிய கார் புக் செய்தவுடன் மீதித்தொகை வழங்கப்படும் என மக்கள் நீதி மய்யம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனை அடுத்து கோவை அவினாசி சாலையில் உள்ள பிரபல கார் ஷோரூமில், ஷர்மிளா பெயரில் 16 லட்சம் ரூபாய் மதிப்பிலான மகேந்திரா மரோசா கார், புக் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து இரு தினங்களுக்கு முன்னர் புதிய காரருக்கான சாவியை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் ஷர்மிளாவிடம் வழங்கினார். தொடர்ந்து சனிக்கிழமை கோவை அவிநாசி சாலையில் உள்ள கார் ஷோரூமில் சனிக்கிழமை ஷர்மிளா, தனது புது காரை குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் உடன் சென்று டெலிவரி எடுத்துள்ளார்.

இது தொடர்பான போட்டோ, வீடியோ சமூக வளைதளங்களில் பரவி வருகிறது. இது குறித்து சர்மிளாவின் தந்தை மகேஷ் கூறுகையில், “நல்ல நாள் என்பதால் சனிக்கிழமை புதிய காரை டெலிவரி எடுத்துள்ளோம். அதன் பின்னர் ஆர்டிஒ நடைமுறைக்கு பின்னர் இரு தினங்களில் கார் வந்துவிடும். புதிய காரை ஜடி நிறுவனத்திற்கு ஷர்மிளா ஓட்ட உள்ளார்” என தெரிவித்தார்.

தொடர்ந்து, மக்கள் நீதி மைய நிர்வாகிகள் கூறுகையில், “ஷர்மிளா ஆசைப்படி புதிய கார் வாங்கி கொடுக்கப்பட்டுள்ளது. அவர் கோவையில் கார் ஓட்ட உள்ளார். இதே போன்று பல பெண்களுக்கு மக்கள் நீதி மையம் உதவி செய்து வருகிறது” என தெரிவித்தனர். கோவையில் முதல் பெண் பேருந்து ஓட்டுநராக ஷர்மிளா பணி புரிவது குறித்து ஈடிவி பாரத் முதன் முதலில் செய்தி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கமல்ஹாசனிடம் கார் சாவியை பெற்றுக்கொண்ட கோவை ஷர்மிளா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.