கோவை : மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சர் சார்பில் கோவை கொடிசியா வளாகத்தில் மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் சார்பில், 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக எழுச்சிமிகு புகைப்பட கண்காட்சி நடைபெற்று வருகிறது.
ஜனவரி 2ஆம் தேதி வரை நடைபெறும் கண்காட்சியை கோவை மாவட்ட ஆட்சியர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் துவக்கி வைத்தார்.
இந்திய சுதந்திர போராட்டம் குறித்த அரிய புகைப்படங்களும், சுதந்திர போராட்ட வீரர்களின் புகைப்படங்களும் காட்சி படுத்தப்பட்டுள்ளன. முதல் நாளில் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளின் சிலம்பம், கரகாட்டம், பரதநாட்டியம் ஆகிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இதையும் படிங்க :2021ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட பிரபலங்கள்