ETV Bharat / state

பள்ளி மாணவிக்கு பாலியல் வன்புணர்வு: 7 பேர் போக்சோவில் கைது! - கோவையில் 7 பேர் போக்சோவில் கைது

கோயம்புத்தூர்: ஒன்பதாம் வகுப்பு மாணவியை பாலியல் வன்புணர்வு செய்த 7 பேரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.

Seven arrested in Bokso
Seven arrested in Bokso
author img

By

Published : Apr 14, 2020, 11:04 PM IST

கோயம்புத்தூர் மாவட்டம் ராமநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் தீபா (16) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். சில நாள்களாக தீபா வயிறு வலிக்கிறது என்று அவரது தாயிடம் கூறியுள்ளார். இதனால், அவரது தாய் கடந்த 11ஆம் தேதி தீபாவை அழைத்துக்கொண்டு அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளார். அங்கு தீபாவை பரிசோதனை செய்ததில் அவர் கருவுற்றிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, தீபாவும், அவரது தாயும் மருத்துவமனையில் இருந்து யாரிடமும் சொல்லாமல் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதைத் தொடர்ந்து, காவல் துறையினர் தீபாவின் வீட்டிற்குச் சென்று அவரிடம் விசாரணை நடத்தினர். அதில், தீபாவை காதலிப்பதாகக் கூறி நட்புடன் பழகிய சக வகுப்பு மாணவர்கள் 4 பேர் உள்பட 10 பேர் சிறுமியை மிரட்டி பாலியல் வன்புணர்வு செய்தது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து, சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த கார்த்திக் (23), தனசேகர் (24), சந்தோஷ் (19), 11, 12ம் வகுப்பு படிக்கும் 4 பேர் உள்பட 7 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் 7 பேர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, மாணவர்கள் 4 பேரை கோவையில் உள்ள சிறுவர் சீர்த்திருத்த பள்ளியிலும் மூதமுள்ள 3 பேரை கோவை மத்திய சிறையிலும் அடைத்தனர். இதில், தொடர்புடைய மேலும் 3 பேரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க:கோவிட் -19: இந்தியாவில் அதிகரிக்கும் இணைய பயன்பாடு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.