ETV Bharat / state

மூத்த முன்னோடிகள் வழியில் போராடி மும்மொழி கொள்கையை எதிர்த்துள்ளோம் - ஸ்டாலின் - கோயம்புத்தூர்

கோவை: மூத்த முன்னோடிகள் வழியில் எதிர்த்து போராடியதன் காரணமாக மும்மொழி திட்டம் தடுத்து நிறுத்தப்பட்டதாக திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

ஸ்டாலின்
author img

By

Published : Jun 12, 2019, 5:13 PM IST

கோவை லட்சுமி மில் சந்திப்பில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திமுக மூத்த முன்னோடிகளின் படத்திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்று மறைந்த, கழகத்தின் தீர்மானக்குழு உறுப்பினர் க.ரா சுப்பையன், உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர் மு. இராமநாதன் ஆகியோரின் உருவ படங்களை திறந்து வைத்தார்.

பின்னர் கூட்டத்தில் அவர் பேசுகையில், ’திமுகவிற்கு மூத்த முன்னோடிகளாக வழிகாட்டி கொண்டு இருந்த தலைவர்களின் படத்தை இன்று திறந்து வைத்து இருக்கின்றோம். மறைந்த மு. இராமநாதனை பல்கலைக்கழகமாக கருதுகின்றேன். திராவிடர் இயக்கம், சமூகநீதி, மொழி பிரச்னை என அனைத்தையும் கரைத்து குடித்த பல்கலைக்கழகமாக இருந்தவர் இராமநாதன். சாதாரண தொண்டராக இருந்து உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினராக, சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினராக உயர்ந்தவர் அவர் என புகழ்ந்தார்.

மூத்த முன்னோடிகள் வழியில் போராடி மும்மொழி கொள்கையை எதிர்த்துள்ளோம் - ஸ்டாலின்

இதே போல திமுகவில் நான் எந்த பொறுப்பில் இல்லாமல் இருந்த போதும், என்னை அழைத்து கூட்டம் நடத்தியவர் க.ரா சுப்பையன் என்றார். மேலும் அவர் பேசுகையில், இரண்டாவது முறையாக பிரதமராக மோடி பதவி ஏற்றதும் புதிய கல்வி கொள்கை என்ற பெயரில் மும்மொழி திட்டம் கொண்டு வர முயல்கின்றார். இதை எதிர்க்க மூத்த முன்னோடிகள் வழியில் நின்று எதிர்த்து போராடியதன் காரணமாக மும்மொழி திட்டம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது என்றார்.

சு.சீனிவாசன்.      கோவை

மீண்டும் மும்மொழி திட்டத்தை கொண்டு வர முயன்ற நிலையில் மூத்த முன்னோடிகள் வழியில் நின்று எதிர்த்து போராடியதன் காரணமாக மும்மொழி திட்டம் தடுத்து நிறுத்தப்பட்டதாக திமுக தலைவர் ஸ்டாலின் பேச்சு...

கோவை லட்சுமி மில் சந்திப்பில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திமுக மூத்த முன்னோடிகளின் படத்திறப்பு விழா நடைபெற்றது இதில் திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்று
மறைந்த கழகத்தின்  தீர்மான குழு உறுப்பினர் க.ரா.சுப்பையன், உயர்நிலை செயல்வதிட்ட குழு உறுப்பினர்  மு.இராமநாதன் ஆகியோரின் உருவ படங்களை ஸ்டாலின் திறந்து வைத்தார்.
 திமுக மூத்த முன்னோடிகள் இருவரின் படங்களை திறந்து வைத்த பின்னர் ஸ்டாலின் கூட்டத்தில் பேசிய அவர் 

திமுக மூத்த முன்னோடிகளாக,வழிகாட்டிக் கொண்டு இருந்த தலைவர்களின் படத்தை இன்று திறந்து வைத்து இருக்கின்றோம்.
மறைந்த மு.இராமநாதனை பல்கலைகழகமாக கருதுகின்றேன். திராவிடர் இயக்கம், சமூகநீதி, மொழி பிரச்சினை என அனைத்தையும் கரைத்து குடித்து பல்கலைகழகமாக இருந்தவர் இராமநாதன். சாதாரண தொண்டராக இருந்து உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினராக,சட்டமன்ற,நாடாளுமன்ற உறுப்பினராக உயர்ந்தவர் மு.ராமநாதன் என புகழஞ்சலி செலுத்தினார்.

இதே போல திமுகவில் எந்த பொறுப்பில் இல்லாமல் இருந்த  போதும் என்னை அழைத்து கூட்டம் நடத்தியவர் க.ரா.சுப்பையன்
இரண்டாவது முறையாக பிரதமராக மோடி பதவிஏற்றதும்   புதிய கல்வி கொள்கை என்ற பெயரில்  மும்மொழி திட்டம் கொண்டு வர முயல்கின்றனர் 
என்ற கொடுமையை பார்க்கின்றோம். 

தமிழக வரலாற்றை அவர்கள் உணராமல் இருந்திருக்கின்றனர்.
இந்தி எதிர்ப்பிற்காக மாணவர் போராட்டத்தை அவர்கள் உணராமல் இருந்திருக்கின்றனர்.
மும்மொழி திட்டம் அறிவித்த சில நிமிடங்களில் இளைஞர்கள் பொங்கி எழ காரணம் கடந்த கால வரலாறு. இந்தி எதிர்ப்பு போராட்டங்களுக்கு முன்நின்று நடத்திய தலைவர்கள் இவர்கள் இருவரும் இந்தியை எதிர்த்து போராடியதில் இந்த இருவர்களின் பங்கு முக்கியமானது
17 வது சட்டபிரிவை எரித்து விட்டு சிறைக்கு சென்றவர்கள் இவர்கள் இருவரும் கழகத்திற்காக 27 முறை சிறை சென்றவர்  இராமநாதன் .
 இருவரும் திமுகவினருக்கு  பாடமாக இருந்து மறைந்திருக்கின்றனர்.

மும்மொழி திட்டத்தை திணிக்க மத்திய அரசு முயலகின்றது 
தியாக சீலர்கள் கடந்த 38 ம் ஆண்டுக்கு முன்னர் இந்தியை எதிர்த்து போராடினார்கள்.
இன்று அதை மீண்டும் மும்மொழி திட்டத்தை கொண்டு வர முயன்ற நிலையில், மூத்த முன்னோடிகள்  வழியில் நின்று  எதிர்த்து போராடியதன் காரணமாக மும்மொழி திட்டம் தடுத்து  நிறுத்தப்பட்டுள்ளது
நாடாளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெற்று இருக்கின்றோம்.

இந்த மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில் தலைவர் இல்லையே என்ற ஏக்கம் இருப்பதை போல , கோவையில் இந்த இரு தலைவர்களும் இல்லையே என்ற ஏக்கம் இருக்கின்றது எனவும் ஸ்டாலின் தெரிவித்தார். கூட்டத்தில் நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் அ.ராசா,கோவை பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் உட்பட பலர் கலந்துகொண்டனர்....
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.