கோயம்புத்தூர்: ஆர்.எஸ்.புரம் பகுதியில் போதை சாக்லேட் விற்கப்படுவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்ததுள்ளது. இந்த தகவலின் அடிப்படையில், உதவி ஆணையர் மணிகண்டன் தலைமையிலான தனிப்படை காவல்துறையினர் திடீர் சோதனை நடத்தினர். அப்போது போதை சாக்லேட்டுகளை விற்பதற்காகச் சென்ற சேத்தன் (30) என்ற ராஜஸ்தான் மாநில வியாபாரியை காவல்துறையினர் கைது செய்தனர்.
பின்னர் அவரிடம் இருந்து 40 கிலோ போதை சாக்லேட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது கஞ்சா சாக்லேட்கள் என கூறப்படுகிறது. தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சேத்தன் ரெங்கே கவுடர் வீதியில் டீக்கடை நடத்தி வருவதும், கோவில்பாளையம் பகுதியில் எலக்டிரிக்கல் கடை நடத்தி வருவதும் தெரிய வந்துள்ளது.
மேலும் இச்சம்பவம் தொடர்பாக ஐந்து பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இதுகுறித்து காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கூறுகையில், “கோவையில் கஞ்சா சாக்லேட் விற்பனையை முழுவதும் கட்டுப்படுத்த தீவிர சோதனை மேற்கொள்ளப்படும்” என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கேரளாவில் 300 கிலோ ஹெராய்ன் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம்- 20 இடங்களில் என்.ஐ.ஏ சோதனை