கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்துள்ள வடுகபாளையம் அருகே போலி டீ தூள் நிறுவனம் செயல்பட்டு வருவதாக உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அலுவலர்கள் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் ஆனந்தன் என்பவர் இந்நிறுவனத்தை நடத்தி வந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரிடமிருந்த 712 கிலோ டீத்தூளை பறிமுதல் செய்து நிறுவனத்திற்கு சீல் வைத்தனர். மேலும் அவர் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
போலி டீ தூள் கம்பெனிக்கு சீல்! - உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் சோதனை
கோவை: பொள்ளாச்சி அருகே செயல்பட்டுவந்த போலி டீ தூள் நிறுவனத்திற்கு உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்களுக்கு சீல் வைத்தனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்துள்ள வடுகபாளையம் அருகே போலி டீ தூள் நிறுவனம் செயல்பட்டு வருவதாக உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அலுவலர்கள் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் ஆனந்தன் என்பவர் இந்நிறுவனத்தை நடத்தி வந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரிடமிருந்த 712 கிலோ டீத்தூளை பறிமுதல் செய்து நிறுவனத்திற்கு சீல் வைத்தனர். மேலும் அவர் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பொள்ளாச்சி வடுக பாளையம் அருகே உள்ள செல்லம்மாள் நகர் பகுதியில் போலி டீ தூள் கம்பெனி நடந்து வருவதாக வந்த ரகசிய தகவலையடுத்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர் இதில் ஆனந்தன் என்பவர் நடத்தி வந்த போலி டீத்தூள் கம்பெனி உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சுப்புராஜ் செல்வ பாண்டி காளிமுத்து ஆகியோரால் கண்டுபிடிக்கப்பட்டு டீ தூள் மாதிரிகளை பரிசோதனைக்கு எடுத்துக்கொண்டனர் அனுமதியின்றி நடைபெறும் கம்பெனி என்பதால் கலப்படம் நடக்க வாய்ப்பு இருப்பதகா தகவல் தெரிவித்தனர் கோவையிலிருந்து டீ தூலை ஏலம் எடுத்து ஆனந்தாஸ் என்ற பெயரில் அனுமதியின்றி பேக்கிங் மற்றும் விற்பனை செய்வது செய்தது கண்டுபிடித்த அதிகாரிகள் 712 கிலோ டீத்தூள் பறிமுதல் செய்து அனுமதியின்றி இயங்கி வந்த கம்பெனிக்கு சீல் வைத்தனர்.