ETV Bharat / state

அரசு பள்ளி ஆசிரியை, அவரது கணவர் போக்சோவில் கைது! - பாலியல் வன்புணர்வு

கோவை: பொள்ளாச்சி அருகே சிறுமியை மிரட்டி பாலியல் வன்புணர்வு செய்த வழக்கில் அரசு பள்ளி ஆசிரியை, அவரது கணவர் ஆகியோர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

School teacher and husband arrested under pocso

author img

By

Published : Oct 21, 2020, 10:28 PM IST

கோவை பொள்ளாச்சி அருகேயுள்ள மாக்கினாம்பட்டியை சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு பேருந்து ஊழியர் தங்கவேல். இவரது மனைவி ஐயம்மாள் அதே பகுதியில் அரசு பள்ளியில் தலைமை ஆசிரியர் பணியாற்றி வருகிறார்.

தங்கவேல் தினசரி தனது மனைவியை இரு சக்கர வாகனத்தில் பள்ளியில் இறக்கி விடுவது வழக்கம். இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் 10 வயது சிறுமியை மிரட்டி தங்கவேல் பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.

மேலும் இதுகுறித்து வாயை திறக்கக்கூடாது என தங்கவேல், அவரது மனைவில் ஐயம்மாள் இருவரும் சேர்ந்து சிறுமியை மிரட்டியுள்ளனர். ஆனால் சிறுமி, இதுகுறித்து தனது பெற்றோரிடன் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் தங்கவேல், ஐயம்மாள் இருவரையும் கைது செய்த காவல்துறையினர், அவர்களை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையிலடைத்தனர்.

இதையும் படிங்க:துக்க வீட்டில் நடந்த துக்க நிகழ்வு: இளைஞர் உயிரிழப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.