கோவை புலியகுளம் கேந்திரா வித்யாலயா பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வரும் தாக்ஷாயினி என்ற மாணவி செப்டம்பர் மாதம் 29ஆம் தேதி சக மாணவர்கள் மூன்று பேரால் தாக்கப்பட்டார். இதில் மாணவியின் இடது கண் அருகில் காயம் ஏற்பட்டது. இது பற்றி மாணவியின் பெற்றோர் பள்ளி தலைமை ஆசிரியரிடம் கேட்ட போது தங்களால் ஒன்றும் செய்ய இயலாது என்று கூறியுள்ளனர்.
இது தொடர்பாக கடந்த மாதம் மாவட்ட ஆட்சியரிடம் மாணவியின் தந்தை மனு அளித்தார். அதன் பின் பள்ளி நிர்வாகம் குழந்தையின் மருத்துவ செலவை தாங்கள் ஏற்றுக்கொள்கிறோம் என்றும், அதற்கு மேல் எங்களால் ஒன்றும் செய்ய இயலாது எனவும் கூறியுள்ளனர். மேலும், இதற்கு மேல் தங்களால் என்ன செய்ய முடியுமோ செய்து கொள்ளுங்கள் என்றும் கூறியுள்ளனர்.
இதுபோல் அலட்சியமாக பேசும் பள்ளியின் மீதும், தாக்குதல் நடத்திய சக மாணவர்களின் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோவை மாவட்ட ஆட்சியரிடம் குழந்தையின் பெற்றோர் கோகுல் ராஜ் மனு அளித்தார். அதன் பின் பேசிய குழந்தையின் தந்தை கோகுல் ராஜ், பள்ளியின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தாக்குதல் நடத்திய மாணவர்களுக்கு டிசி வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: எங்களை காப்பாற்றுங்கள்..! - எஸ்பியிடம் இளம்பெண் மனு!