ETV Bharat / state

போக்குவரத்து பணியில் பள்ளி மாணவன்! - licence

கோவை: ஓட்டுநர் உரிமை இல்லாமல் இருசக்கரவாகனத்தை இயக்கி விபத்து ஏற்படுத்திய பள்ளி மாணவரை, 10 நாட்கள் போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட நீதிமன்றம் உத்தரவிட்டது.

School boy in transportation
author img

By

Published : Aug 3, 2019, 5:36 AM IST

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த கோட்டூர் பகுதியில் 17 வயது பள்ளி மாணவன், கடந்த ஆண்டு இருசக்கர வாகனத்தில் ஆழியாறு சென்று தனது நண்பரை அழைத்துக்கொண்டு பொள்ளாச்சி வந்தார். அப்போது வால்பாறைசாலையில், ஜெஜெ நகர் அருகே வந்தபோது, சாலையை கடக்க முயன்ற அப்பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் மீது இருசக்கர வாகனம் மோதியது. இதில் மணிகண்டனின் கால் உடைந்தது.

போக்குவரத்து பணியில் பள்ளி மாணவன்

இது குறித்து வழக்குப் பதிவு செய்த ஆழியாறு போலீஸார் பள்ளி மாணவரை கைது செய்தனர். இந்த வழக்கு கோவையில் உள்ள இளஞ்சிறார் சீர்திருத்த மன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் மாணவரின் குடும்ப சூழ்நிலையை கருத்தி்ல் கொண்டும், இளைஞர் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு சட்டம் 2015ன் படி, மாணவரை கோட்டூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், போக்குவரத்து காவலருடன் இணைந்து, 10 நாட்கள் மாலை 4 மணி முதல் 7 மணி வரைபோக்குவரத்தை சரி செய்யவேண்டும்.

மேலும் போக்குவரத்துவிதிகளை அறிந்து கொள்ள போக்குவரத்து காவலருடன் இணைந்து பணியாற்றி சமூக சேவை செய்திட வேண்டும். பின்னர் பள்ளி மாணவரை பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டது.

இதையடுத்து கடந்த 3 நாட்களாக வால்பாறை சாலையில் உள்ள நா.மூ. சுங்கம் சந்திப்புபகுதியில் போக்குவரத்து காவலருடன் இணைந்து போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

Intro:PoliceBody:policeConclusion:பொள்ளாச்சி அருகே ஓட்டுநர்உரிமை இல்லாமல் இருசக்கரவாகனத்தை ஓட்டிச் சென்றுவிபத்தை ஏற்படுத்திய பள்ளிமாணவரை, போக்குவரத்துபோலீஸாருடன் இணைந்துபோக்குவரத்தை சீரமைக்கும்பணியில், 10 நாட்கள் பணியாற்றநீதிமன்றம் உத்தரவிட்டது.இதையடுத்து வால்பாறைசாலையில் நேற்று போக்குவரத்தைஒழுங்குபடுத்தும் பணியில்ஈடுபட்டார். பொள்ளாச்சி- ஆக-2
பொள்ளாச்சி அடுத்த கோட்டூர்பகுதியை 17 வயது  பள்ளிமாணவன், கடந்த ஆண்டு, இருசக்கரவாகனத்தில் ஆழியாறு  சென்று, தனது நண்பரை அழைத்துக்கொண்டு பொள்ளாச்சிக்கு சென்றுகொண்டிருந்தார், வால்பாறைசாலையில், ஜெஜெ நகர் அருகேவரும் போது, சாலையை கடந்துசெல்ல முயன்ற அப்பகுதியைசேர்ந்த மணிகண்டன் என்பவர் மீதுஇருசக்கர வாகனம் மோதியது, இதில் மணிகண்டனின் கால்உடைந்தது. இது குறித்து வழக்குபதிவு செய்த ஆழியாறு போலீஸார்பள்ளி மாணவரை கைது செய்தனர்.இந்த வழக்கு கோவையில் உள்ளஇளஞ்சிறார் சீர்திருத்த மன்றத்தில்நடைபெற்றது. வழக்கை விசாரித்தநீதிமன்றம் மாணவரின் குடும்பசூழ்நிலையை கருத்தி்ல் கொண்டும், இளைஞர் மற்றும் குழந்தைகள்பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு சட்டம்2015 ன் படி , மாணவரை கோட்டூர்காவல்நிலைய எல்லை உட்பட்டபகுதியில், போக்குவரத்துகாவலருடன் இணைந்து, 10 நாட்கள்மாலை 4 மணி முதல் 7 மணி வரைபோக்குவரத்தை சரி செய்யவேண்டும். மேலும் போக்குவரத்துவிதிகளை அறிந்து கொள்ளபோக்குவரத்து காவலருடன்இணைந்து பணியாற்றி சமூகசேவை செய்திட வேண்டும். பின்னர்பள்ளி மாணவரை பெற்றோரிடம்ஒப்படைக்க வேண்டும் எனஉத்தரவிட்டது.  இதையடுத்து கடந்த 3 நாட்களாக  வால்பாறை சாலையில்உள்ள நா.மூ. சுங்கம் சந்திப்புபகுதியில் போக்குவரத்து  காவலருடன் இணைந்துபோக்குவரத்தை சீரமைக்கும்பணியில் ஈடுபட்டு வருகிறார். 
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.