ETV Bharat / state

காவல்துறைக்கு சவால் விடும் சந்தன மரக் கடத்தல்

கோவை: பிரேம்குமார் என்பவரது வீட்டில் வளர்ந்து வந்த சந்தன மரத்தை அடையாளம் தெரியாத நபர்கள் வெட்டிக் கடத்திச் சென்ற சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

sandal wood
author img

By

Published : Jul 31, 2019, 2:22 PM IST

கோவை சாய்பாபா காலனியைச் சேர்ந்தவர் பிரேம்குமார். எல்ஐசி முகவராக வேலை பார்த்து வரும் இவர், தனது வீட்டில் சந்தன மரத்தை வளர்த்து வந்தார்.

அந்த மரத்தை நேற்றிரவு (ஜூலை 30) அடையாளம் தெரியாத நபர்கள் வெட்டிக் கடத்திச் சென்றனர். வீட்டின் முன்பாக இருந்த சந்தன மரம் வெட்டப்பட்டதை அறிந்த பிரேம்குமார் உடனடியாக சாய்பாபா காலனி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

சந்தன மரக் கடத்தல்

பின் காவல்துறையினர் நிகழ்விடத்திற்கு வந்து இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த சில மாதங்களகாவே சாய்பாபா காலனி, ஆர்.எஸ். புரம் ஆகிய பகுதிகளில் இருந்த சந்தன மரங்கள் வெட்டி கடத்தப்பட்டுள்ளன. இந்த சம்பவங்கள் தொடர்பாக ஏற்கனவே கோவிந்தராஜ், வல்லரசு என்ற இருவர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் நேற்றும் அதே பகுதியில் சந்தன மரம் வெட்டப்பட்டிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Intro:கோவை சாய்பாபா காலனி பகுதியில் பிரேம்குமார் என்பவரது வீட்டில் இருந்த சந்தன மரத்தை அடையாளம் தெரியாத நபர்கள் வெட்டி கடத்தி சென்றனர். சம்பவம் குறித்து சாய்பாபா காலனி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.Body:
கோவை சாய்பாபா காலனி பாரதி பார்க் 2 வது வீதியை சேர்ந்தவர் பிரேம்குமார் . எல்.ஐ.சி ஏஜென்டான பிரேம்குமார் தனது வீட்டில் சந்தனமரம் ஒன்றை வளர்த்து வந்தார். 30 அடி உயரத்தில் இருந்த அந்த சந்தன மரத்தை நேற்று இரவு அடையாளம் தெரியாத நபர்கள் வெட்டி கடத்தி சென்றனர். இந்நிலையில் வீட்டின் முன்பாக இருந்த சந்தன மரம் வெட்டப்பட்டதை அறிந்த பிரேம்குமார் உடனடியாக சாய்பாபா காலனி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சாய்பாபா காலனி காவல் துறையினர் சந்தன மர கடத்தல் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாய்பாபா காலனி மற்றும்
ஆர்.எஸ். புரம் ஆகிய பகுதிகளில் கடந்த
மாதத்தில் மட்டும் 4 முறை சந்தனமரங்கள் வெட்டப்பட்டன. இந்த சந்தன மரக் கடத்தல் சம்பவங்கள் தொடர்பாக நேற்றையதினம் கோவிந்தராஜ், வல்லரசு என்ற இருவர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், காவல்துறையினருக்கு சவால் விடும் விதமாக அதே பகுதியில் மீண்டும் சந்தன மரம் வெட்டப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.