ETV Bharat / state

சேலத்தில் பெட்ரோலிய குழாய்கள் அமைக்க எதிர்ப்பு! - எதிர்ப்பு

சேலம்: கோவை முதல் இருகூர் வரை பெட்ரோலிய குழாய்கள் பதிக்கும் திட்டத்திற்கு  எதிர்ப்பு தெரிவிக்கப் போவதாக சேலம் விவசாயிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

சேலத்தில் பெட்ரோலிய குழாய்கள் அமைக்க எதிர்ப்பு!
author img

By

Published : Jul 16, 2019, 10:17 PM IST

கோயம்புத்தூர் இருகூர் முதல் கர்நாடக தேவனகுந்தி வரை விவசாய விளைநிலத்தில் பெட்ரோலிய பொருள்கள் எடுத்துச் செல்ல குழாய்கள் அமைக்கப்போவதாக பாரத் பெட்ரோலிய நிறுவனம் அறிவித்தது.

இந்தத் திட்டதிற்காக பாரத் பெட்ரோலிய நிறுவனம் விளைநில உரிமையாளருக்கு நோட்டீஸ் அனுப்பி வருகிறது. இந்தக் குழாய்கள் சேலம் மாவட்டத்தில் சங்ககிரி, எடப்பாடி, ஓமலூர், மேட்டூர், நங்கவள்ளி தாலுகா ஆகிய பகுதிகளை பாதிக்கிறது.

இதனால் நங்கவள்ளி ஒன்றியத்தைச் சேர்ந்த தோரமங்கலம், தாசகாபட்டி, சூரப்பள்ளி, பெரியசோரகை ஊராட்சிகளைச் சேர்ந்த விவசாயிகள் இத்திட்டத்தை பற்றிய ஆலோசனை கூட்டத்தை கடந்த செவ்வாய் கிழமை அன்று நங்கவள்ளி பழக்காரனூரில் நடத்தினார்கள்.

இக்கூட்டத்தில் நங்கவள்ளி ஒன்றிய செயலாளர் பாலாஜி, ஒன்றிய பொருளாளர் தங்கராஜ், ஒன்றிய துணைத் தலைவர் பொன்.பீட்டர் உட்பட ஏராளமான விசாயிகளும் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

இதில் கலந்துகொண்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ஏ.ராமமூர்த்தி, மாவட்ட துணைத் தலைவர் பி.தங்கவேலு, சி.பி.எம் மாவட்டக்குழு உறுப்பினர் கே.ராஜாத்தி, உயர் மின்னழுத்த கோபுரம் எதிர்ப்பு கூட்டு இயக்க நங்கவள்ளி பொறுப்பாளர் சுரேஷ் ஆகியோர் இத்திட்டத்தைப் பற்றி விசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் விளக்கமளித்தனர்.

இறுதியில் பாரத் பெட்ரோலிய நிறுவனம் அனுப்பிய நோட்டீஸ்க்கு பதிலளிக்கும் விதமாக, 11 கேள்விகளும் அக்கேள்விகளுக்கு உரிய நகல்களும் கேட்டு நோட்டீஸ் அனுப்பலாம் எனவும் அது கிடைத்தவுடன் இத்திட்ட அனுமதி பற்றி முடிவு எடுக்கலாம் என்றும் பதிலளிக்கும் வரை இத்திட்டத்தை செயல்படுத்தக்கூடாது எனவும் நங்கவள்ளி ஒன்றிய விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.

Intro:பெட்ரோலிய குழாய் அமைக்க எதிர்ப்பு

சேலம்விவசாயிகள் கூட்டத்தில் முடிவு

Body:

கோவை முதல் இருகூர் வரை அமையவுள்ள பெட்ரோலிய குழாய் பதிக்கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

கோயம்புத்தூர் இருகூர் முதல் பெங்களூரூ தேவனகுந்தி வரை விவசாய விளைநிலத்தில் பாரத் பெட்ரோலிய பொருள்கள் குழாய் வழியே எடுத்து செல்ல உள்ளது. இந்த நாசகரத் திட்டத்தை தமிழகத்தில் மேற்கு மாவட்டங்களில் அதற்குரிய விவசாய விளைநிலம் கையகப்படுத்திட, விவசாயிகளுக்கு நோட்டீஸ் அனுப்பி வருகிறது.

சேலம் மாவட்டத்தில் சங்ககிரி, எடப்பாடி, ஓமலூர், மேட்டூர் தாலூக்கா பாதிக்கிறது. மேட்டூர் தாலூக்கா நங்கவள்ளி ஒன்றியத்தில் தோரமங்கலம், தாசகாபட்டி, சூரப்பள்ளி, பெரியசோரகை, நங்கவள்ளி ஊராட்சிகள் பாதிக்கப் படுகிறது.

பாதிக்கப்படும் விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம் செவ்வாயன்று நடைப்பெற்றது. தோரமங்கலம் ஊராட்சி மற்றும் நாசகாப்பட்டி கிராமம் சார்பில் பழக்காரனூரிலும்,சூரப்பள்ளி மற்றும் பெரிய சோரகை ஊராட்சிகள் சார்பில் பழையூரில் நடைபெற்றது.
சூரப்பள்ளி மற்றும் தோரமங்கலம் ஊராட்சிகள் பொறுப்பாளர்களாக
காசி.சாமிநாதன், ஏ.பாலு, பி.பரசுராமம், ஏ.நாகப்பன், அருண்குமார், கணேசன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

பெரியசோரகை ஊராட்சி, தாசகாப்படி கிராமம் பொறுப்பாளர்களாக தோழர்கள் ஏ.குமார், பிஎம்.முனியப்பன், எஸ்ஆர்.பழனிசாமி, குழந்தைகள கவுண்டர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ஏ.ராமமூர்த்தி, மாவட்ட துணைத்தலைவர் பி.தங்கவேலு, சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் கே.ராஜாத்தி, உயர்மின்னழுத்த கோபுரம் எதிர்ப்பு கூட்டியக்கம் நங்கவள்ளி பொறுப்பாளர் சுரேஷ் ஆகியோர் விளக்குரை ஆற்றினர்.

தவிச நங்கவள்ளி ஒன்றிய செயலாளர் பாலாஜி, ஒன்றிய பொருளாளர் தங்கராஜ், ஒன்றிய துணைத்தலைவர் பொன்.பீட்டர் உள்ளிட்டு பாதிக்கப்படும் விவசாயிகள் ஏராளமாக பங்கெடுத்தனர்.

Conclusion:
பாரத் பெட்ரோலிய நிறுவனம் அனுப்பிய நோட்டீஸ்க்கு 11 கேள்விகளும், அதற்குரிய நகல்களும் கேட்டு நோட்டீஸ் அனுப்புவது என்றும், அது கிடைத்தவுடன் பதில் தருவது என்றும், பாதிக்கப்படும் நங்கவள்ளி ஒன்றிய விவசாயிகள் அனைவரையும் சந்திப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.