கோயம்புத்தூர்: Illicit liquor sale: பொள்ளாச்சியில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு கோவை மாவட்ட கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் உத்தரவின்பேரில் கள்ளச்சந்தையில் மது விற்பனையைத் தடுக்க தீவிர வாகன சோதனை மற்றும் பல்வேறு கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் பொள்ளாச்சி, வால்பாறை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்ய பதுக்கிவைக்கப்பட்டிருந்த மதுபாட்டில்கள், கர்நாடகா, கேரளா மாநிலங்களிலிருந்து பொள்ளாச்சிக்கு கள்ளச்சந்தையில் விற்க கொண்டுவந்த மதுபாட்டில்கள் என ரூ. 20 லட்சம் மதிப்புள்ள 12 ஆயிரம் மதுபாட்டில்களை பொள்ளாச்சி-கோவை செல்லும் சாலையில் உள்ள ஒரு இடத்தில் வைத்து மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு துணை கண்காணிப்பாளர் செல்வராஜ் தலைமையில், ஆய்வாளர் மீனா பிரியா மற்றும் காவல் துறையினர் இன்று (டிச.28) அழித்தனர்.
இதுகுறித்து துணை கண்காணிப்பாளர் செல்வராஜ் கூறுகையில், "கோவை மாவட்டத்தில் கள்ளச்சந்தையில் மதுபாட்டில்களை விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு - கேரளா எல்லையில் தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: நட்சத்திர விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்குத் தடை?