ETV Bharat / state

சாலைப் பாதுகாப்பு வார விழா: தலைக்கவசம் அணிந்து வாகன விழிப்புணர்வுப் பேரணி - சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி ஹெல்மெட் அணிந்து வாகன விழிப்புணர்வு பேரணி

கோவை: சாலைப் பாதுகாப்பு வார விழாவையொட்டி பொள்ளாச்சி வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சார்பில் தலைக்கவசம் அணிந்து விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.

road safety week
road safety week
author img

By

Published : Jan 20, 2020, 5:18 PM IST

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சார்பில், ஆண்டுதோறும் சாலைப் பாதுகாப்பு வாரவிழா நடத்தப்படுகிறது. அதன்படி இந்தாண்டுக்கான சாலைப் பாதுகாப்பு வாரவிழா இன்று தொடங்கி 27ஆம் தேதிவரை நடக்கிறது.

இந்நிலையில் 11ஆவது சாலைப் பாதுகாப்பு வாரவிழாவின் முதல்நாளான இன்று பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும்விதமாக இருசக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணிந்துசெல்லும் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. இதனை வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சிவகுருநாதன், காவல் துறை கண்காணிப்பாளர் சிவக்குமார் கொடியசைத்து தொடங்கிவைத்தனர்.

இந்தப் பேரணியானது பொள்ளாச்சி மகாலிங்கபுரம் ரவுண்டானாவில் தொடங்கி கோவை சாலை, கடைவீதி, ராஜா மில் சாலை, மத்திய பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாகச் சென்று நகராட்சி அலுவலகத்தில் நிறைவடைந்தது.

சாலைப் பாதுகாப்பு வாரவிழாவையொட்டி தலைக்கவசம் அணிந்து வாகன விழிப்புணர்வுப் பேரணி

இந்தப் பேரணியில் இருசக்கர வாகனத்தில் செல்லும் பெண்களும் கட்டாயம் தலைக்கவசம் அணிந்து செல்ல வேண்டும் என்பதை வலியுறுத்தி அதிகளவில் கல்லூரி மாணவிகள், பெண்கள் காவல் துறையினர், தன்னார்வலர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். அடுத்தடுத்த நாள்களில், சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி, சாலைப் பாதுகாப்பு குறித்து அமலாக்கப் பணி, விழிப்புணர்வு ஊர்வலம் நடக்கவுள்ளது.

இதையும் படிங்க: மதுபோதையில் கரும்பு கேட்டுத் தகராறு: விற்பனையாளருக்கு கத்திக்குத்து

Intro:rallyBody:rallyConclusion:சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
பொள்ளாச்சி : ஜன-20
11ஆவது சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் இன்று தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனம் ஓட்டுவது விபத்தில்லா பயணம் மேற்கொள்வது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இருசக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணிந்து செல்லும் பேரணி நடைபெற்றது பொள்ளாச்சி மகாலிங்கபுரம் ரவுண்டானாவில் வட்டார போக்குவரத்து அலுவலர் சிவகுருநாதன் காவல்துறை கண்காணிப்பாளர் சிவகுமார் கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தனர் கோவை சாலை, கடைவீதி, ராஜா மில் ரோடு, மத்திய பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சென்ற பேரணி நகராட்சி அலுவலகத்தில் நிறைவடைந்தது இந்த பேரணியில் 100% இருசக்கர வாகனத்தில் செல்லும் பெண்களும் கட்டாயம் தலைக்கவசம் அணிந்து செல்ல வேண்டும் என்பதை வலியுறுத்தி அதிகளவில் கல்லூரி மாணவிகள் பெண்கள் காவல்துறையினர், தன்னார்வலர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.