கோவை மாவட்டம் பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் மாலை இடியுடன் கூடிய கனமழை அரை மணி நேரம் பெய்தது. பிரதான சாலையான பொள்ளாச்சி பல்லடம் சாலை அருகில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இன்று பெய்த கனமழையினால் சாலையில் அதிக அளவிலான நீர் தேங்கி வீடுகளுக்குள் வரும் அபாயம் ஏற்பட்டது. இதுகுறித்து பொதுமக்கள் பேசுகையில், மழைநீர் வடிகால் இல்லாததால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். இதனால் பல்வேறு தொற்று நோய்கள் பரவும். எனவே நகராட்சி அலுவலர்கள் பொதுமக்கள் நலன் கருதி மழை காலம் தொடங்கும் முன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இதையும் படிக்கலாமே: கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுக்கும் வீடுகளை இழந்த மக்கள்; நடவடிக்கை எடுக்குமா அரசு?