ETV Bharat / state

சாலை நடுவே மின் கம்பம்: மாற்றி அமைக்க கோரிக்கை

கோவை: சாலை நடுவே மக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறாக உள்ள மின் கம்பத்தை அப்புறப்படுத்துமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சாலையின் நடுவே மின் கம்பம்
சாலையின் நடுவே மின் கம்பம்
author img

By

Published : Mar 8, 2020, 9:39 AM IST

கோவை மாவட்டம் ஆலந்துறை பேரூராட்சிக்கு உள்பட்ட மூங்கில் மடைகுட்டையிலிருந்து மசராயன் கோவில் வரை, சுமார் இரண்டு கிலோ மீட்டருக்கு, இரண்டு கோடி ரூபாயில் தார் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

மலை அடிவாரத்தில் அமைக்கப்படும் இந்த தார் சாலை, அனைத்துக் கூறுகளாக இருப்பதோடு மட்டுமல்லாமல், மின் கம்பங்களுக்கு இடையே அமைக்கப்படுவதால், அந்த வழியாக செல்லக்கூடிய பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளனர். மேலும் விளைநிலங்களில் இருந்து விவசாய பொருட்களை சந்தைக்கு எடுத்துச் செல்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

சாலையின் நடுவே மின் கம்பம்

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது, இரண்டு கோடி ரூபாயில், இரண்டு கிலோ மீட்டருக்கு தார்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மூங்கில் மடை குட்டையிலிருந்து அமைக்கப்படும் இந்த சாலையின் நடுவே, சுமார் 10 மின் கம்பங்கள் வருவதால், இந்த சாலையை கனரக வாகனங்கள் பயன்படுத்த முடியாத சூழல் இருக்கிறது.

தொடர்ந்து, தங்களுடைய விவசாய நிலங்களில் இருந்து விளைவிக்கப்பட்ட விளைபொருட்களை, சந்தைக்கு டிராக்டர் அல்லது நான்கு சக்கர வாகனங்களில் எடுத்துச் செல்வதில் கடும் சிரமமாக இருக்கிறது. எனவே, உடனடியாக மின்கம்பங்களை அப்புறப்படுத்திவிட்டு தார்சாலை அமைக்கும் பணியை தொடங்க வேண்டும். பின்னர், பாதி பணிகள் முடிவடைந்த நிலையில் அப்படியே நிற்கிறது.

மேலும், மின் கம்பங்களுக்கு இடையே தார் சாலை அமைப்பதால், அரசின் பணம் விரயமாகும் என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தொகுதியில் இதுபோன்ற தரமற்ற முறையில் சாலை அமைக்கப்படுவதாகவும், உடனடியாக அவர் தலையிட்டு தங்களுக்கு அகலமான தடையை ஏற்படுத்தித் தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: 'தயவு செய்து எங்களை இந்தியாவுக்கு கூட்டிட்டுப் போங்க' - குமுறும் மீனவர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.