கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகேயுள்ள ஆழியார் குரங்கு நீர்வீழ்ச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட பகுதியாகும். இங்கு, கடந்தாண்டு (2019) வனத்துறையினர் சுற்றுலா பயணிகள் நலன் கருதி ஐந்து லட்சம் ரூபாய் செலவில் தடுப்பு கம்பிகள் அமைத்தனர்.
இந்நிலையில், வால்பாறை, மேற்கு தொடர்ச்சி மலைகளில் கனமழை பெய்தது வெள்ள பெருக்கு ஏற்ப்பட்டதின் காரணமாக மழை வெள்ளத்தில் குரங்கு நீர்வீழ்ச்சியில் தடுப்பு கம்பிகள் அடித்து செல்லப்பட்டன.
இதனால் நீர்வீழ்ச்சிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை இருந்தது. இதையடுத்து சுற்றுலா பயணிகள் வசதிக்காக ஐந்து லட்சம் ரூபாய் செலவில் மீண்டும் தடுப்பு கம்பிகள் அமைக்கும் திட்டம் நடந்தது.
இந்தத் திட்டப் பணிகள் தற்போது முழுமையாக முடிந்துவிட்டது. இது குறித்து, ஆனைமலை புலிகள் காப்பாக கள இயக்குநர் சேவியர் கூறும்போது, “2019 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ள பெருக்கில் குரங்கு நீர்வீழ்ச்சியில் தடுப்பு கம்பிகள் அடித்து செல்லப்பட்டது.
இதையடுத்து உயர் அலுவலர்கள் உத்தரவின் பேரில் ரூ.5 லட்சம் நிதி ஒதுக்கி, குரங்கு நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் வசதிக்காக மீண்டும் புதிய தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் 9ஆவது கொண்டை ஊசி வளைவுவில் உள்ள காட்சிமுனை புதிய வடிவில் அமைக்கும் பணி விரைவில் நடைபெறும்” என்றார்.
இதையும் படிங்க: தவிக்கும் தமிழர்கள்: மீட்க மாநிலம் தழுவிய இணையவழிப் போராட்டம்