பொள்ளாச்சி: குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறையினர் பொள்ளாச்சி உடுமலைப்பேட்டை சாலையில் வாகன ரோந்து சென்றனர்.
அப்போது, செல்லப்பம்பாளையம் பிரிவு அருகில் சந்தேகப்படும்படியாக TN 40 C 0984 என்ற பதிவு எண் கொண்ட லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் 50 கிலோ எடையுள்ள சுமார் 342 சாக்கு மூட்டையில் 17 டன் ரேஷன் அரிசி குருணையும், 50 கிலோ எடை கொண்ட 38 சாக்கு மூட்டைகளில் சுமார் 1900 கிலோ ரேஷன் அரிசியும் மொத்தம் 19 டன் இருந்தது தெரியவந்தது.
இதுதொடர்பாக விசாரணை நடத்தியதில் பொது விநியோகித்திட்ட ரேஷன் அரிசியை குருணையாக அரைத்து கோழி தீவனத்துக்கு பயன்படுத்தி கேரளவிற்க்கு கொண்டு செல்வது காவல்துறை விசாரணையில் தெரிய வந்தது. இதனையடுத்து லாரி ஒட்டுனர் சரத்குமாரை கைது செய்த போலீசார், கடத்தலுக்கும் பயன்படுத்தப்பட்ட லாரியையும் பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க: கவியருவி மலைப்பாதையில் கார் கவிழ்ந்து விபத்து