கோயம்புத்தூர் மாவட்டம் இடையர்பாளையம் மருதநகர் பகுதியில் சென்ற சில மாதங்களுக்கு முன்பு இரவு நேரங்களில் வீட்டின் ஜன்னல் கதவுகளை திறந்து நோட்டமிடும் சைக்கோ திருடனின் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதுதொடர்பாக துடியலூர் காவல் துறையினர் அந்தப் பகுதியில் ரோந்துப் பணியை அதிகரித்ததால் சைக்கோ திருடன் நடமாட்டம் இல்லாமல் இருந்தது.
இந்நிலையில் மீண்டும் இடையர்பாளையம் பகுதியில் உள்ள பூம்புகார் நகர், மருத நகர், ஸ்ரீனிவாச நகர் ஆகிய பகுதிகளில் அதே சைக்கோ திருடன் நடமாட்டம் இருப்பதாகத் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் நேற்று (அக். 05) இரவு 10.15 மணியளவில் மருதநகர் பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் வரும் சைக்கோ திருடன் அங்குள்ள ஒரு வீட்டின் ஜன்னல் கதவை திறந்து பார்த்துள்ளான்.
இதையும் படிங்க: திருட சென்ற இடத்தில் தூங்கிய திருடன் சிறையில் அடைப்பு!