ETV Bharat / state

ஃபர்ஹானா இஸ்லாமியர்களுக்கு எதிரான படமல்ல - தயாரிப்பாளர் எஸ்ஆர்.பிரபு விளக்கம்!

ஃபர்ஹானா இஸ்லாமியர்களுக்கு எதிரான படமல்ல என தயாரிப்பாளர் எஸ்ஆர்.பிரபு விளக்கமளித்துள்ளார்.

ஃபர்ஹானா இஸ்லாமியர்களுக்கு எதிரான படமல்ல

author img

By

Published : May 13, 2023, 3:49 PM IST

சென்னை: நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ஜித்தன் ரமேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் ஃபர்ஹானா. இப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த நிலையில் இப்படம் இஸ்லாமியர்களுக்கு எதிரான படம் என்று கூறி தமிழகத்தில் பல இடங்களில் இஸ்லாமிய அமைப்புகள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இதனால் திரையரங்குகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இன்னும் ஒருபடி சென்று சில ஊர்களில் படத்தின் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. இந்த நிலையில் இன்று படத்தின் இயக்குனர் நெல்சன் வெங்கடேசன், தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு, எழுத்தாளர் மற்றும் வசனகர்த்தா மனுஷ்யபுத்திரன் ஆகியோர் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தனர்.

முதலாவதாக பேசிய படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, ”ஒரு திரையரங்கில் மட்டும் தான் படம் ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. ஆனால் நிறைய திரையரங்குகளில் ரத்து என தவறான தகவல் பரவி வருகிறது. இது அனைவருக்குமான படமாகவும். குடும்ப படமாக இருப்பதாகவும் படம் பார்த்த பார்வையாளர்கள் கூறுகிறார்கள். அது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. குழந்தைகளுக்கான படமா என்றால் அது இல்லை. ஆனால் குடும்பங்களுக்கான படம்.

எனவே யாருக்கும் தயக்கம் வேண்டாம். அனைவரும் வந்து திரையரங்குகளில் இந்தப் படத்தைப் பார்க்கலாம். உலகம் முழுவதும் 500 திரையரங்குகளில் படம் வெளியிடப்பட்டிருக்கிறது. ஆனால் அதில் ஒரு திரையரங்கில் மட்டும் தனிப்பட்ட காரணத்திற்காக படம் திரையிடப்படவில்லை. இது இஸ்லாமியர்களுக்கு எதிரான படம் இல்லை என்றும் தெரிவித்தார்.

ஒரு நல்ல படத்தை புரிந்து கொள்ளாமல் இதுபோன்று யார் தவறாக சொல்கிறார்கள் என்று தெரியவில்லை. ஒரு சமூகத்தை சேர்ந்த படமோ அல்லது தனிப்பட்ட குடும்பத்தை பற்றியோ இந்த கதை இல்லை. அதனால் தான்‌ துணிச்சலோடு பத்திரிக்கையாளர்களோடு உரையாட அழைத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

வேலைக்கு செல்ல கூடிய ஒரு பெண்ணை பற்றியே படம் நகர்த்தப்பட்டுள்ளது. ஏதேனும் ஒரு காட்சியிலாவது இஸ்லாமியர்களை பற்றி ஏதாவது கதைகள் வந்து இருந்தால் சொல்லட்டும். ஓடிடி யில் 10 படம் வந்தால் அதில் 5 படம் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக காட்டுகிறார்கள். இந்த படத்தை அனைத்து தரப்பு மக்களும் கொண்டாடுகிறார்கள்” என ஃபர்ஹானா திரைப்படத்தின் திரைகதை அம்சங்களைக் முன்வைத்து பேசினார்.

இயக்குனர் நெல்சன் வெங்கடேசன்:

”நல்ல படங்களை மட்டும் தான் இயக்குவேன் என்ற வைராக்கியத்தோடு இருக்கிறேன். படத்தை பார்த்தவர்கள் யாரும் படத்தை பற்றி தவறாக சொல்லவில்லை. படத்தை பார்க்காதவர்கள் தான் தவறாக சொல்லகிறார்கள். இந்த படம் ஒரு உளவியல் சார்ந்த படம். எல்லோரும் பார்க்க வேண்டிய படம். இந்தப் படத்தை தைரியமாக பார்க்கலாம். குழந்தைகளுக்கான படமும் தான். நேற்றைய தினத்தில் படம் சில இடங்களில் தடைபட்டு நிறுத்தப்பட்டதாக செய்திகள் பரவி வந்தது. அதை நம்ப வேண்டாம்” என்று தெரிவித்தார்.

கதையாசிரியர் மனுஷ்யபுத்திரன்:

”இந்தப் படம் இஸ்லாமியர்களுக்கு ஆதரவான படம் தான். ஒரு தவறான வார்த்தையோ சிந்தனையோ இந்த படத்தில் இல்லை. காஷ்மீர் பைல்ஸ் தொடங்கி தி கேரளா ஸ்டோரி போன்ற படங்கள் தான் சிறுபான்மை சமூகத்தினரை இழிவு படுத்தியிருக்கிற திரைப்படங்களைத் தான் நாங்கள் எதிர்த்தோம். இந்த படம் கேரளா ஸ்டோரிக்கு எதிரான படமென்று கூட சொல்லலாம். இப்படம் குறித்த பொய்யான சர்ச்சைகள் பெண் விடுதலைக்கு எதிரானது என்று நினைவில் கொள்ள வேண்டும். எந்த சமூகத்தில் இருந்து பெண்கள் வேலைக்கு சென்றாலும் பிரச்சனை இல்லாமல் இருக்காது” என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஒரே வாரத்தில் 5 படங்கள்.. கோடை விடுமுறை விருந்தாகும் ஃபீல் குட் மூவிஸ்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.