கரோனா பெருந்தொற்றுக்கு எதிராகப் போராடும் வகையில் கோவை அரசு மருத்துவமனைக்குத் தனியார் நிறுவனம் மூலமாக ஒன்பது லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான வென்டிலேட்டர், அமைச்சர் எஸ்.பி. வேலுமணி முன்னிலையில் வழங்கப்பட்டது.
கோவை அரசு மருத்துவமனையிலுள்ள அம்மா உணவகத்தில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பார்வையிட்டார். இதையடுத்து, அங்குள்ள மக்களிடம் உணவு பற்றி கேட்டறிந்தார்.
பின்னர், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த அமைச்சர் வேலுமணி மருத்துவர் சங்கப் பணியாளர்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்கினார்.
இந்நிகழ்வுகளில், கோவை மாவட்ட ஆட்சியர் எஸ்.பி. வேலுமணி, கவுண்டம்பாளையம் சட்டப்பேரவை உறுப்பினர் ஆறுகுட்டி ஆகியோர் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: முதியோர்களுடன் காணொலி காட்சியில் பிறந்த நாள் கொண்டாடிய மோகன்லால்