2018ஆம் ஆண்டு மே மாதம் காந்திபுரம் பகுதியில், எஸ்16 (S16) என்ற பேருந்து இரு சக்கர வாகனத்தில் வந்த கீதாஞ்சலி (24) என்ற பெண்ணின் மீது மோதியது. அதில் அப்பெண்ணின் இடது கை சேதமடைந்தது. அதன் பின்னர் அப்பெண்ணுக்கு தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அவரது தந்தை ஜனார்த்தன், சிறப்பு சார்பு நீதிமன்றத்தில் இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்தார். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 2019 மார்ச் மாதம், 75 லட்சத்து 74 ஆயிரம் ரூபாயை இழப்பீடாக வழங்க கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றம் உத்தரவிட்டது.
நீதிமன்றம் உத்தரவிட்டு ஏழு மாதங்கள் ஆகியும், இன்னும் இழப்பீடு வழங்காததால் இன்று ரயில் நிலையம் பகுதியில் வந்த அந்த தனியார் பேருந்தை, நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்தனர். ஜப்தி செய்யப்பட்ட பேருந்து கோவை நீதிமன்றத்தில் வைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: புத்தாண்டு பணியின் போது விபத்தில் சிக்கிய காவலர் - இழப்பீடுகோரி உறவினர்கள் கோரிக்கை!