ETV Bharat / state

‘தனி ஈழம் அமைக்க இலங்கை அதிபருக்கு அழுத்தும் கொடுங்கள்!’ - கே.எஸ். அழகிரி - The Prime Minister must put pressure on the Sri Lankan President

கோவை: இலங்கையில் தமிழர்களுக்கு அதிகார பகிர்வு தந்து தமிழ் மாநிலம் அமைய பிரதமர் மோடி இலங்கை அதிபருக்கு அழுத்தம் தர வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி வலியுறுத்தியுள்ளார்.

Ks Alagiri
Ks Alagiri
author img

By

Published : Nov 30, 2019, 11:31 PM IST

கோவை விமான நிலையத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘பாஜக அரசின் தவறான பொருளாதார கொள்கையினால் கடந்த எட்டு ஆண்டுகளை விட மிக மோசமான நிலையில் நாடு உள்ளது. ஆறாண்டு காலத்தில் நாடு எவ்வளவு சீரழிந்துள்ளது என்பதை இந்தப் பொருளாதாரக் கொள்கை காட்டுகிறது.

இலங்கையில் அனைவருக்கும் அதிகாரப் பகிர்வு வர வேண்டும். எனவே இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சவிற்கு பிரதமர் மோடி ஒரு அழுத்தத்தை தரவேண்டும். இலங்கையின் வட கிழக்கு மாகாணங்களை ஒருங்கிணைத்து தமிழர்களுக்கு அதிகார பகிர்வு தந்து அங்கு தமிழ் மாநிலம் அமைய மோடி இலங்கை அதிபருக்கு அழுத்தம் தர வேண்டும்’ என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், உள்ளாட்சி தேர்தலில் மறைமுகமாக ஆள் தூக்கும் வேலையை ஆளுகின்ற அரசு செய்யும் என்பதால் நேரடி தேர்தல்தான் வேண்டும் என திமுக மட்டும் வழக்கு போடவில்லை, அதிமுகவின் தோழமைக் கட்சிகளும் வழக்கு தொடர்ந்துள்ளன.

கே.எஸ் அழகிரி பேட்டி

மகாராஷ்ராவில் பாஜக எப்படி ஆட்சி அமைத்தது என்பதை மக்கள் புரிந்து கொண்டார்கள், குடியரசுத் தலைவரும், ஆளுநரும் அரசியலமைப்புச் சட்டத்தை காக்க வேண்டும். அவர் செய்யாததால் உச்ச நீதிமன்றம் செய்துள்ளது என்றார்.

இதையும் படிங்க: 'மகாராஷ்டிரா அரசியல் விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறேன்' - கே.எஸ் அழகிரி

Intro:இலங்கையில் தமிழர்களுக்கு அதிகார பகிர்வு தந்து தமிழ் மாநிலம் அமைய பிரதமர் மோடி இலங்கை அதிபரை அழுத்தம் தர வேண்டும் என தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே எஸ் அழகிரி வலியுறுத்தியுள்ளார்

Body:கோவை விமான நிலையத்தில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் அப்போது பேசிய அவர் பாஜக அரசின் தவறான பொருளாதார கொள்கையினால் கடந்த எட்டு ஆண்டுகளை விட மிக மோசமான நிலையில் நாடு உள்ளதாகவும் ஆறாண்டு காலத்தில் இந்த நாட்டை எவ்வளவு சீரழித்து உள்ளது என்பதை இந்தப் பொருளாதாரக் கொள்கை காட்டுவதாக தெரிவித்தார் கோட்சே இந்த நாட்டின் தேச பக்தர் என்று சொன்னார் காந்தி யார் என கேள்வி எழுப்பியவர் இந்த நாட்டின் வளர்ச்சிக்கு கேடான கட்சி பாஜக என்பதை இளைஞர்கள் உணர வேண்டும் என்றும் எளிய பொருளாதார வழி தெரியாமல் பணமதிப்பிழப்பு நடவடிக்கை செய்த மோடியால் இந்த நாடு வீழ்ச்சி கண்டு வருகிறது என தெரிவித்தார் இலங்கையில் அனைவருக்கும் அதிகாரப் பகிர்வு வர வேண்டும் எனவே ராஜபக்சேவிற்கு மோடி ஒரு அழுத்தத்தை தரவேண்டும் என கூறியவர்,இலங்கையில் வடக்கு கிழக்கு மாகாணங்கள் ஒருங்கிணைத்து தமிழர்களுக்கு அதிகார பகிர்வு தந்து அங்கு தமிழ் மாநிலம் அமைய மோடி இலங்கை அதிபருக்கு அழுத்தம் தர வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

உள்ளாட்சி தேர்தலில் மறைமுகமாக ஆள் தூக்கும் வேலையை ஆளுகின்ற அரசு செய்யும் என்பதால் நேரடி தேர்தல்தான் வேண்டும் எனவும் திமுக மற்றும் உள்ளாட்சி தேர்தலுக்கு வழக்கு போடவில்லை அதிமுகவின் தோழமைக் கட்சிகளும் வழக்கு தொடர்ந்து இருப்பதாக தெரிவித்தார் மராட்டியத்தில் பாஜக எப்படி ஆட்சி அமைத்தது என்பதை மக்கள் புரிந்து கொண்டார்கள் குடியரசுத் தலைவர் ஆளுநர்கள் அரசியலமைப்பு சட்டத்தை காக்க வேண்டும் அவர்கள் செய்யத் தவறியதை உச்சநீதிமன்றம் செய்து இருப்பதாக தெரிவித்த அவர் வயதான குடியரசுத் தலைவரை அதிகாலையில் எழுப்ப வேண்டிய கட்டாயம் என்ன என கேள்வி எழுப்பினார் மராட்டியத்தில் எப்படி ஆட்சி அமைத்தாலும் அது போல் கோவாவிலும் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சி அமைப்போம் என தெரிவித்த அவர்

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.