ETV Bharat / state

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவின் குன்னூர் பயணம் ரத்து; டெல்லி செல்கிறார் - கோவை மாவட்ட செய்திகள்

குடியரசுத்தலைவர் திரவுபதி முர்முவின் குன்னூர் பயணம் ரத்து செய்யப்பட்டு,அவர் டெல்லி புறப்படுகிறார்.

President Droupadi Murmu's visit to Coonoor has been cancelled

author img

By

Published : Feb 19, 2023, 12:10 PM IST

கோவை: குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு நேற்று ஈஷாவில் நடைபெற்ற மகா சிவராத்திரி விழாவில் கலந்து கொண்டார். பின்னர் இன்று காலை ராணுவ ஹெலிகாப்டர் மூலம் குன்னூர் ராணுவ மையத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் பங்கேற்று உரையாற்றுவதாக இருந்தது.

இந்த நிலையில் இன்று காலை முதல் குன்னூரில் மேகமூட்டம் அதிகமாக இருந்தது. இதைத் தொடர்ந்து மோசமான வானிலை காரணமாக, குடியரசுத்தலைவர் முர்முவின் குன்னூர் பயணம் ரத்து செய்யப்பட்டதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து குடியரசுத்தலைவர் மதியம் 12:15 மணிக்கு கோவை விமான நிலையத்திலிருந்து தனி விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.

இதையும் படிங்க: நடிகர் மயில்சாமி காலமானார்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.