இதுகுறித்து அப்பகுதி மக்கள் பேசுகையில், விளையாட்டுப் பூங்கா அமைத்துக்கொள்ள அரசு ஒதுக்கிய 56 சென்ட் பரப்பளவிலான இடத்தில் பொதுமக்கள் அனைவரும் இணைந்து சொந்த செலவில் பூங்காவை அமைத்துள்தாகவும்; அதனை தற்போது ஆக்கிரமிப்பு செய்யும் வகையில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர் செயல்பட்டு வருவதாகவும் குற்றஞ்சாட்டினர்.
ஊராட்சி மன்றத் தலைவர் பூங்கா இருந்த இடத்தில் சமுதாய நலக்கூடம் அமைக்கும் நோக்கில், பூங்காவை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் அங்கிருந்த 20க்கும் மேற்பட்ட மரங்களை வெட்டி எடுத்துவிட்டதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர்.
மேலும், சமுதாயக்கூடத்திற்கு என்று வேறொரு இடத்தில் அடிக்கல் நாட்டப்பட்டு வேலைகள் தொடங்கிய நிலையில், அதனை நிறுத்தி விட்டு பொதுமக்கள் பயன்படுத்தி வரும் பூங்காவை ஆக்கிரமதித்து சமுதாயக்கூடம் அமைப்பதற்கு வேலைகளைத் தொடங்கியிருப்பது கண்டனத்திற்குரியது என்றும்; உடனடியாக இதனை மாவட்ட ஆட்சியர் தடுத்து நிறுத்தவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.
இதையும் படிங்க: மஸ்து பிடித்த காட்டு யானை - தண்டு வீசிய வனத்துறையினர்!