ETV Bharat / state

பாஜக அரசை மீண்டும் தேர்ந்தெடுத்தது வருத்தம் - பி.ஆர் நடராஜன்

கோவை: சிறு, குறு தொழில்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஜிஎஸ்டியை ரத்து செய்ய அனைத்து எம்பிக்கள் ஆதரவுடன் செயல்படுவேன் என்று பி.ஆர். நடராஜன் தெரிவித்துள்ளார்.

File pic
author img

By

Published : May 24, 2019, 9:57 AM IST

கோவை மக்களவைத் தொகுதியில் வெற்றிபெற்ற சிபி.எம். வேட்பாளர் பி.ஆர். நடராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, 'திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் போட்டியிட்டு 1.80 லட்சம் வாக்குகள் கூடுதலாக வெற்றியை அளித்த வாக்காளர்களுக்கு நன்றி.

தமிழ்நாட்டில் மிகப்பெரிய மாற்றம் வேண்டும் என்பதற்காக இந்த வாக்கினை மக்கள் அளித்துள்ளார்கள். மதச்சார்புடைய இந்த அரசிற்கு எதிராகவும் மக்கள் வெகுண்டெழுந்தது தெரிகிறது.

பி.ஆர் நடராஜன் செய்தியாளர் சந்திப்பு

சிறு, குறு தொழில்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஜிஎஸ்டியை ரத்து செய்ய அனைத்து எம்.பி.க்கள் ஆதரவுடன் செயல்படுவேன். மேலும் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்த உரிய நடவடிக்கை எடுப்பேன். நொய்யல் நதியில் இருக்கும் பிரச்னைகளை கலைந்து நதியை மீட்டு எடுக்கும் முயற்சியில் நாம் இப்போது உள்ளோம்.

மதச்சார்புடைய பாஜக அரசை மக்கள் மீண்டும் தேர்ந்தெடுத்திருப்பது எங்களைப் பொறுத்தவரை வருத்தமான ஒன்றுதான். ஆனால் ஒற்றுமையை செயல்படுத்தும் அரசாக இந்த மத்திய அரசு இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன்' என தெரிவித்தார்.

Intro:சிறு குறு தொழில்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஜிஎஸ்டியை ரத்து செய்ய அனைத்து எம்பிக்கள் ஆதரவுடன் செயல்படும் என கோவை பாராளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற p.r. நடராஜன் பேட்டி

Body:கோவை அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் கோவை மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்ற சிபிஎம் வேட்பாளர் p.r. நடராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது பேசிய அவர் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறேன் என்றும் 1.80 லட்சம் வாக்குகள் கூடுதலாக வெற்றியை அளித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக கூறி அவர் தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றம் வேண்டும் என்பதற்காக இந்த வாக்கினை மக்கள் அளித்துள்ளார்கள் என்றும் மத சார்புடைய இந்த அரசிற்கு எதிராகவும் ஜிஎஸ்டி எதிராகவும் மதவாத அரசியலுக்கு எதிராக வெகுண்டெழுந்த மக்கள் வாக்கு வாக்களித்துள்ளனர் என தெரிவித்தார் சிறு குறு தொழில்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஜிஎஸ்டியை ரத்து செய்ய அனைத்து எம்பிக்கள் ஆதரவுடன் செயல்படுவேன் என்றும் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்த உரிய நடவடிக்கை எடுப்பேன் என தெரிவித்த அவர் கடுமையான வரட்சி காலத்தில் நதியைப் பற்றி பேச வேண்டி இருக்கின்றது என்றும் நொய்யல் நதி கவுசிகா நதி யில் இருக்கும் பிரச்சினைகளை கலைந்து நகைகளை மீட்டு எடுக்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்த அவர் மதச்சார்புடைய பாஜக அரசை மக்கள் மீண்டும் தேர்ந்தெடுத்திருப்பது எங்களைப் பொறுத்தவரை வருத்தமான ஒன்றுதான் எனக் கூறியவர் ஒற்றுமையை செயல்படுத்தும் அரசாக இந்த மத்திய அரசு இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன் என தெரிவித்தார்

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.