ETV Bharat / state

விசைத்தறி உரிமையாளர்கள் 2ஆவது நாளாக வேலைநிறுத்தம் - கோவையில் விசைத்தறி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்

Power Loom Owners Strike: கூலி உயர்வு வழங்கக்கோரி கோவை, திருப்பூர் மாவட்ட விசைத்தறி உரிமையாளர்கள் இரண்டாவது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

விசைத்தறி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்
விசைத்தறி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்
author img

By

Published : Jan 10, 2022, 3:49 PM IST

Power Loom Owners Strike: கோயம்புத்தூர், திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்கள் உள்ளன. விசைத்தறியாளர்கள் ஜவுளி உற்பத்தியாளர்களிடமிருந்து நூலை வாங்கி கூலி அடிப்படையில் துணியாக நெசவுசெய்து தருகின்றனர்.

இதற்காக மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை ஜவுளி உற்பத்தியாளர்கள் கூலி உயர்வு வழங்குவது வழக்கம். ஆனால் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்களுக்கு கடந்த ஏழு ஆண்டுகளாக கூலி உயர்வு இல்லாததால் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்திவந்தனர்.

கூலி உயர்வு ஒப்பந்தம்

கூலி உயர்வு பிரச்சினை தீர்வு ஏற்படுத்த கடந்த நவம்பர் மாதம் அமைச்சர்கள், கோயம்புத்தூர், திருப்பூர் மாவட்ட ஆட்சியர்கள், தொழிலாளர் நலத் துறை அலுவலர்கள் முன்னிலையில் ஜவுளி உற்பத்தியாளர்கள், விசைத்தறி உரிமையாளர்களுக்கு இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் சோமனூர் ரகத்திற்கு 23 விழுக்காடு, பல்லடம் மற்றும் இதர ரகங்களுக்கு 20 விழுக்காடு கூலி உயர்வு வழங்குவது என ஒப்பந்தம் செய்யப்பட்டது.

விசைத்தறி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்

வேலைநிறுத்தம்

இதனையடுத்து இந்தக் கூலி உயர்வு டிசம்பர் 1ஆம் தேதிமுதல் வழங்கப்படும் என ஜவுளி உற்பத்தியாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்து. இந்நிலையில் இதுவரை கூலி உயர்வு வழங்கப்படாததால் ஜனவரி 9ஆம் தேதிமுதல் விசைத்தறி கூடங்களை நிறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் செய்வதென்ன கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் கூட்டு கமிட்டி கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டது.

தொழிலாளர்கள் பாதிப்பு

அதன்படி நேற்று (ஜனவரி 9) முதல் கோயம்புத்தூர், திருப்பூர் மாவட்டங்களில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் கோயம்புத்தூர், திருப்பூர் மாவட்டங்களில் இத்தொழிலை நம்பியுள்ள சுமார் ஐந்து லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மிகுந்த சிரமம்

இது குறித்து கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் பழனிசாமி கூறுகையில், "கடந்த ஏழு ஆண்டுகளாக கூலி உயர்வு இல்லாமல் மிகுந்த சிரமத்திற்கு இடையே விசைத்தறி தொழிலை நடத்திவருகிறோம். தற்போது கூலி உயர்வு வழங்காததால் விசைத்தறிகளை இயக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக நாள் ஒன்றுக்கு 1.5 கோடி மீட்டர் காடா துணி உற்பத்தி நிறுத்தத்தால், 60 கோடி ரூபாய் உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்தத் தொழிலை நம்பி சுமார் ஐந்து லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். உடனடியாக அரசு ஜவுளி உற்பத்தியாளர்களை அழைத்துப் பேசி கூலி உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் கூடுதல் கட்டுப்பாடு? - முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.