பொள்ளாச்சி ஆறுமுகநேரியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர் தனது நண்பர் ஒருவர் மூலம் வால்பாறையில் பெண் இருப்பதாக அறிந்து பெண் பார்க்கச் சென்றுள்ளார். அங்கு சுரேஷ் ஆனந்தன் என்பவரின் மகள் சோபியாவை பெண் பார்த்துள்ளார்.
இவர்களுக்கு கடந்த செப்டம்பர் மாதம் நான்காம் தேதி அம்பராம்பாளையத்தில் உள்ள கோயிலில் வைத்து திருமணம் நடைபெற்றது. திருமணம் நடைபெற்று நான்கு நாட்களில் சோபியா தொடர்ந்து வாந்தி எடுத்ததால், மருத்துவ பரிசோதனை செய்தபோது கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து மணிகண்டன் சோபியாவிடம் விசாரித்ததில் அவருக்கு ஏற்கனவே வால்பாறையைச் சேர்ந்த தயாளன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது தெரியவந்தது.
முதல் கணவரை ஏமாற்றி விவாகரத்து பெறாமல் தன்னையும் ஏமாற்றி திருமணம் செய்ததாக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மணிகண்டன் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் மகளிர் காவல்துறையினர் விசாரித்தபோது சோபியா பணம் நகைக்கு ஆசைப்பட்டு பெற்றோருடன் கூட்டு சேர்ந்து மணிகண்டனை ஏமாற்றியது தெரியவந்தது. இதையடுத்து, சோபியா மற்றும் அவரின் பெற்றோர்கள், சகோதரர்கள் ஆகிய ஐந்து பேர் மீது வழக்குப்பதிவு செய்து மகளிர் காவல்துறையினர் சோபியாவை தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க: