கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த மார்ச்ச நாயக்கன்பாளையம் ஊராட்சி, கணபதி பாளையத்தில் செயல்பட்டுவந்த எலைட் சால்வன்ட் பிரைவேட் லிமிடெட் என்ற தனியார் நிறுவனத்தில், அனுமதியின்றி யூரியா உர வகைகளைப் பயன்படுத்தி ஒட்டக்கூடிய பசைகள் தயாரித்துவருவதாக பொள்ளாச்சி சார் ஆட்சியருக்குத் தொடர்ந்து தகவல் கிடைத்தது.
![Pollachi sub-Collector sealed to a private company](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/img-20201119-wa00221605774237684-12_1911email_1605774249_774.jpg)
இதையடுத்து, பொள்ளாச்சி சார் ஆட்சியர் தலைமையிலான அலுவலர்கள் தனியார் நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்டனர். இதில், நிறுவனத்தில் 45 கிலோ கொண்ட 927 யூரியா மூட்டைகள் பதுக்கிவைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, உர மூட்டைகள் அனைத்தையும் கைப்பற்றி பொள்ளாச்சி சார் ஆட்சியர் வைத்தியநாதன் நிறுவனத்தை மூடி சீல்வைத்தார்.
![Pollachi sub-Collector sealed to a private company](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/img-20201119-wa00161605774237686-21_1911email_1605774249_225.jpg)
இந்த ஆய்வின்போது, ஆனைமலை வட்டாட்சியர் வெங்கடாச்சலம், உதவி வேளாண்மை இயக்குநர் ஆனைமலை ஆகியோர் உடனிருந்தனர். மேலும், உர மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்விற்கும் அனுப்பப்பட்டுள்ளது.
மேலும், நிறுவனத்தின் உரிமையாளர் முஸ்தபாவிடம் வாக்குமூலம் பெறப்பட்டு விசாரணை நடைபெற்றுவந்த நிலையில், திடீரென அவர் காரில் தப்பி ஓடிவிட்டார். அதைத்தொடர்ந்து ஆனைமலை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து தப்பி ஓடிய முஸ்தபாவை காவலர்கள் தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க: ஆம்பூரில் உரிய அனுதியின்றி இயங்கிவந்த குடிநீர் ஆலைகளுக்குச் சீல்வைப்பு!