பொள்ளாச்சி அடுத்த தில்லைநகரைச் சேர்ந்த கூலித்தொழிலாளியான ஜீவபாரதி. தான் ஒரு கூலித் தொழிலாளி என்பதால், புற்றுநோய் பாதித்த தனது தந்தை முருகானந்தம் என்பவருக்கு சிகிச்சைக்காக உதவி பெற பொள்ளாச்சி சார்-ஆட்சியர் வைத்திநாதனிடம் கோரிக்கை வைத்தார்.
அவரின் கோரிக்கை மனுவை பரிசீலித்த சார் ஆட்சியர், பாதிப்படைந்தவருக்கு சிகிச்சையளிக்க அடையார் புற்றுநோய் மருத்துவமனைக்கு பரிந்துரை செய்ததுடன் பொள்ளாச்சியிலிருந்து சென்னை செல்ல ஆம்புலன்ஸ் வசதியும் ஏற்பாடு செய்து கொடுத்தார். மேலும், தனது சொந்த பணத்திலிருந்து ரூ.15000 ஆயிரம் நிதியுதவியாக வழங்கினார்.