கோயம்புத்தூர்: தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சிப் பாலியல் வழக்கு விசாரணை கடந்த 2019ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் சபரிராஜன், திருநாவுக்கரசு, மணிவண்ணன், வசந்த்குமார், சதீஷ், பாபு, ஹெரோன் பால், அருளானந்தம், அருண்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
குற்றவாளிகள் அனைவருக்கும் அக்டோபர் 20ஆம் தேதி குற்றப்பத்திரிகையின் நகல் வழங்கப்பட்டு, ஆன்லைன் மூலம் விசாரணை நடைபெற்று வருகிறது.
இவ்வழக்கினை விசாரித்து வரும் கோயம்புத்தூர் மகளிர் நீதிமன்ற நீதிபதி வழக்கு விசாரணையை நவம்பர் 11ஆம் தேதிக்கு தற்போது ஒத்திவைத்தார்.