பொள்ளாச்சி மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள வால்பாறை சுற்றுவட்டாரப் பகுதியில் கடந்த சில நாட்களாக மழை இல்லாமல் காணப்பட்டது. இந்நிலையில் இன்று திடீரென வால்பாறை, கவர்கல் உள்ளிட்ட பகுதியில் திடீரென கனமழை பெய்தது.
இதனால் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்திலுள்ள ஆழியார் குரங்கு அருவியில் திடீரென காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. காலை முதல் குரங்கு அருவியில் ஒரு சில சுற்றுலா பயணிகள் வந்து குளித்து சென்ற நிலையில், மதியத்திற்கு மேல் திடீரென அருவியல் காட்டாற்று வெள்ளம் பயங்கர சத்தத்துடன் பெருக்கெடுத்து வந்ததால் சுற்றுலாப்பயணிகள் வியப்படைந்தனர்.
இதைத்தொடர்ந்து பாதுகாப்பு கருதி, வனத்துறையினர் குரங்கு அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்லவும், குளிக்கவும் திடீரென தடை விதித்தனர். இதை தொடர்ந்து அருவிக்கு குளிக்க வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.