கோயம்புத்தூர்: தமிழ்நாட்டில் கரோனா நோய்த் தொற்று அதிகரித்து வந்ததனால், அனைத்து கோயில்களும் கடந்த 2 மாதங்களாக மூடப்பட்டிருந்தன. தற்போது தொற்று குறைவதால் அனைத்து வழிபாடு தலங்களும் இன்று (ஜூலை 5) முதல் திறக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.
மாசாணியம்மன் கோயில் திறப்பு
இதனையடுத்து அனைத்து கோயில்களும் இன்று (ஜூலை 5) திறக்கப்பட்டன. அந்த வகையில் தமிழ்நாட்டில் புகழ்பெற்ற ஆனைமலை மாசாணியம்மன் கோயிலும் திறக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி முகக்கவசம் அணிந்தும்; தகுந்த இடைவெளியைப் பின்பற்றியும்; ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை கிருமி நாசினி தெளிக்கப்பட்டும் பக்தர்களுக்கு சுவாமி தரிசனம் செய்ய அனுமதியளித்தனர்.
71 நாட்களுக்கு பின் இன்று திறக்கப்பட்ட கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து மேலும் பொது போக்குவரத்து துவங்கப்பட்டதால், பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏராளன பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர்.
இதையும் படிங்க: வெளிமாநிலங்களில் இருந்து வருவோருக்கு இ-பாஸ் கட்டாயம்!