கோட்டூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் சிறப்பு உதவி ஆய்வாளர் சம்பந்தம், கோட்டூர் பகுதிக்குட்பட்ட சங்கம் பாளையம் பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் அப்சல், அன்வர், சர்தார் அலி ஆகிய மூன்று இளைஞர்கள் ஒரே இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர்.
அவர்களைக் காவலர்கள் வழிமறித்தபோது வாகனத்தை நிறுத்தாமல் சென்றுள்ளனர். இதனால் உதவி ஆய்வாளர் தன் கையில் வைத்திருந்த லத்தியை அவர்கள் மீது வீசியுள்ளார். அப்படி வீசிய லத்தியானது இருசக்கர வாகனத்தின் சக்கரத்தில் சிக்கி அவர்கள் மூவரும் கீழே விழுந்தனர்.
இதில் பலத்த காயமடைந்த அவர்கள் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர், மேல் சிகிச்சைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். உதவி ஆய்வாளரின் இந்த அத்துமீறலைக் கண்டித்து அப்பகுதியிலிருந்த மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
இச்சம்பவம் குறித்து மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் விவேகானந்தன் தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: தமிழர்கள் சோமாலியர்கள் ஆகிவிடுவார்கள் - முகிலன் எச்சரிக்கை!