கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே தேவணாம்பாளையத்தில் 11 கோடியே 3 லட்சம் ரூபாய் செலவில் துணைமின் நிலையம் கட்டப்பட்டப்பட்டுள்ளது. இதனை தமிழ்நாடு சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் நேற்று ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருப்பூர் மாவட்டத்தில் 4.5 லட்சம் ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்யும் விவசாயிகளின் கனவாக ஆனைமலையாறு- நல்லாறுதிட்டம் உள்ளது. அந்த திட்டம் நிச்சயமாக நிறைவேறும்.
தமிழ்நாடு முதலமைச்சர் அதனை நிறைவேற்றித் தருவார். அதற்காக நேரடியாக அவரே திருவனந்தபுரம் சென்று கேரள முதலமைச்சரை சந்தித்துள்ளார். கேரள முதலமைச்சரும் செய்தியாளர்களிடம் தமிழ்நாடும் கேரளாவும் ஒருதாய் பிள்ளைகள் என்று கூறியுள்ளார். அவர்கள் கேட்பதை நாங்கள் கொடுப்போம். நாங்கள் கேட்பதை அவர்கள் கொடுப்பார்கள் என்று தெரிவித்திருக்கிறார்.
இருமாநில முதலமைச்சர்களும் கூடிப்பேசியதன் விளைவாக தமிழ்நாடு அரசும் கேரள அரசும் உயர்மட்ட நிபுணர்குழுவை அமைத்துள்ளது. முதற்கட்டமாக கேரளா குழு சென்னைக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்திச் சென்றிருக்கிறது.
வரும் மாதத்தில் தமிழ்நாடு அரசின் குழுவும் திருவனந்தபுரம் சென்று அம்மாநில அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. திருப்பூர் மாவட்ட விவசாயிகளின் கனவுத் திட்டம் விரைவில் நிறைவேறும். பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம் புதுப்பிக்கப்படுமானல் நம்முடைய விவசாயிகளுக்கு பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்கும். இதன் மூலம் காய்கறிகள், பால் உற்பத்தி, தென்னைமட்டை தொழிற்சாலை போன்றவை அதிகரிக்கும் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மாணவியுடன் நாடகக் காதல் - பாமக வட்ட செயலாளர் கைது