தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், பொங்கல் பண்டிகையை வரவேற்கும் விதமாக கல்லூரிகளில் மாணவ, மாணவிகள் சமத்துவப் பொங்கல் வைத்து கொண்டாடிவருகின்றனர். அந்த வகையில், நேற்று பொள்ளாச்சி அரசு கலைக் கல்லூரியில் சமத்துவப் பொங்கல் கொண்டாடப்பட்டது.
அதில், கல்லூரி மாணவ, மாணவிகள் பாரம்பரியமான வேட்டி, சேலை அணிந்து வந்து புதுப்பானையில் பொங்கலிட்டு பொங்கலோ பொங்கல் என சொல்லி மகிழ்ந்தனர். இதையடுத்து, மாடுகளுக்கு சிறப்புப் பூஜை நடத்தப்பட்டு, பொங்கல் வழங்கப்பட்டது, இதனைத்தொடர்ந்து கல்லூரி மாணவ, மாணவிகள் கிராமியப் பாடலுக்கு நடனம் ஆடியும் கிராமிய மேளதாளங்கள் முழங்க ஆடிப்பாடியும் மகிழ்ந்தனர்.
மேலும் கல்லூரியில் அனைவரும் ஒற்றுமையாக இருந்து ஆடிப்பாடி சமத்துவப் பொங்கல் கொண்டாடுவது மகிழ்ச்சி அளிப்பதாக மாணவர்கள் தெரிவித்தனர். இதேபோல், பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பொங்கல் விழா மிகவும் சீரும் சிறப்பாக பாரம்பரிய முறைப்படி கொண்டாடப்பட்டது. விழாவில் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் என அனைவரும் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: