ETV Bharat / state

வேலூர் தேர்தல் - திமுகவை எச்சரிக்கும் பொள்ளாச்சி ஜெயராமன் - மடிக்கணினி

கோயம்புத்தூர்: வேலூர் மக்களவைத் தேர்தலில் திமுக மீண்டும் பணபலத்தை காண்பித்தால் சட்டம் தன் கடமையைச் செய்யும் என்று சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கூறியுள்ளார்.

function
author img

By

Published : Jul 24, 2019, 11:37 PM IST

பொள்ளாச்சி கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட நெகமம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 1000க்கும் மேற்பட்ட மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டது. இதில் சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கலந்துகொண்டு மாணவர்களுக்கு மடிக்கணினியை வழங்கினார்.

சட்டப் பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன்

இதனையடுத்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”வேலூர் தேர்தலில் அதிமுக மிகப்பெரிய வெற்றியை நிச்சயம் பெறும். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக அளித்தது நிறைவேற்ற முடியாத வாக்குறுதி என்று மக்கள் புரிந்துகொண்டு விழிப்புடன் இருக்கிறார்கள். திமுக கூட்டணி ஆட்சி மத்தியில் இல்லை, மாநிலத்திலும் ஆட்சி அமைக்க முடியாத அளவிற்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டி உள்ளதால் வேலூர் மக்களவைத் தேர்தலில் மீண்டும் அதிமுகவை வெற்றி பெறச் செய்வார்கள். வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக மீண்டும் பணபலத்தை காட்டினால் சட்டம் தன் கடமையைச் செய்யும்” என்றார்

Intro:LaptopBody:LabTopConclusion:வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் திமுக மீண்டும் பணம் பலத்தை காண்பித்தால் சட்டம் தன் கடமையைச் செய்யும் - சட்டப் பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் பொள்ளாச்சியில் பேட்டி

பொள்ளாச்சி - ஜூலை - 24

பொள்ளாச்சி கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட நெகமம், பொள்ளாச்சி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் ஆயிரத்து 950 11ம் மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் சட்டப் பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கலந்துகொண்டு மாணவர்களுக்கு மடிக்கணினியை வழங்கி தொடங்கி வைத்தார், இதைத்தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய பொள்ளாச்சி ஜெயராமன், வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக மிகப்பெரிய வெற்றியை நிச்சயம் பெறும் என்றும், நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக நிறைவேற்ற முடியாத வாக்குறுதி அளித்தது என்று மக்கள் புரிந்து கொண்டு விழிப்புடன் இருப்பதாகவும், தமிழகத்தில் மொத்த பட்ஜெட்டே 2 லட்சம் கோடி என்றும், ஆனால் புதிதாக சாலை பணியாளர்கள் மற்றும் மக்கள் நல பணியாளர்கள் பணியமர்த்துவது என திமுக நிறைவேற்ற முடியாத வாக்குறுதி அளித்தது, திமுக கூட்டணி மத்தியிலும் ஆட்சி இல்லை. மாநிலத்திலும் ஆட்சி அமைக்க முடியாத அளவிற்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டி உள்ளதால், வேலூர் மக்களவைத் தேர்தலில் மக்கள் விழிப்புடன் இருப்பதால் அதிமுக அரசுக்கு மீண்டும் அங்கீகாரம் அளிக்கும் வகையில் அதிமுகவை வெற்றி பெறச் செய்வார்கள் என்றும், வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் திமுக மீண்டும் பணம் பலத்தை காட்டினால் சட்டம் தன் கடமையைச் செய்யும் என்றும் பேட்டியின் போது பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்தார்

பேட்டி - பொள்ளாச்சி ஜெயராமன்,
சட்டப் பேரவை துணை சபாநாயகர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.