பொள்ளாச்சி: கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சியில் கடந்த சில நாட்களாக மழை கொட்டி வருகிறது. வழக்கம்போல் மாலை வேளையில் மழை கொட்டத்தொடங்கியது. மழையுடன் பேருந்தினுள் நுழைந்த மக்களுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது.
மழை நின்றுவிட்டதை பேருந்தின் வெளியே பார்க்கத் தேவையில்லாத அளவுக்கு, பொள்ளாச்சியில் இருந்து ஆழியார் நோக்கி செல்லும் 37A அரசுப்பேருந்தினுள் மழைநீர் வடிந்து, பயணிகளை நனைத்தது.
இதனால் பயணிகள் பேருந்தினுள் குடைபிடித்தபடியே தங்கள் ஊர்களுக்குச் செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். அப்போது, சக பயணி ஒருவர் எடுத்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: 'தீ.. தளபதி...' வெளியானது வாரிசு படத்தின் 2ஆவது பாடல்