கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே அர்த்தநாரி பாளையத்தில் சுற்றித்திரிந்த ஆட்கொல்லி காட்டுயானை 'அரிசிராஜா' இதுவரை எட்டு பேரைக் கொன்றுள்ளது. இந்த யானையால் மேலும் ஏழு பேர் படுகாயமும் அடைந்துள்ளனர். யானையைப் பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் போராட்டம் நடத்திய நிலையில், கடந்த சனிக்கிழமை காட்டு யானையைப் பிடிக்க உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில் நேற்று மாலை பருத்தியூர் தனியார் தோட்டத்தில் நின்றுகொண்டிருந்த காட்டு யானை 'அரிசி ராஜா'வை வனத்துறை மருத்துவர் கலைவாணன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.
அதன்பின், லாரியில் காட்டு யானை ஏற்றப்பட்டது. காட்டு யானைக்கு அதிக டோஸ் மயக்க ஊசி செலுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. லாரியில் சென்று கொண்டிருக்கும் போது பல முறை 'அரிசி ராஜா' காட்டு யானை மயக்க மடைந்தது. பிடிக்கப்பட்ட இந்த காட்டுயானை டாப்சிலிப் பகுதியில் உள்ள வரகளியாறு கரோலில் அடைக்கப்பட்டது.
இதுகுறித்து, அர்த்தநாரி பாளையம், சுற்றுப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், 'காட்டுயானையைப் பிடிக்கக்கூறித்தான் நாங்கள் கோரிக்கை வைத்தோம். ஆனால், அதைக் கொடுமை படுத்த வேண்டும் என்று கூறவில்லை’ என்றனர்.
இதையும் படிங்க:
ஆட்கொல்லி 'அரிசி ராஜா'வை மயக்க ஊசி போட்டு பிடித்த வனத் துறை!